Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்.. கோட்டையில் திக்திக்.. அதிரடியாக மாற்றப்பட்ட அதிகாரிகள்.. என்ன நடந்தது?

முன்னதாக குடியரசுத் தின விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற உள்ளதாக ஒன்இந்தியா சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். முதல்வர் ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு பின் முக்கிய காரணங்கள் இருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், அவர்கள் பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பு உள்ளது. இவர்களுக்கு junior administrative grade அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தாம்பரம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விருதுநகர், தேனி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பணியிடமாற்றம்

பணியிடமாற்றம்

முன்னதாக குடியரசுத் தின விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற உள்ளதாக ஒன்இந்தியா சார்பாக செய்தி வெளியிட்டு இருந்தோம். பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளனர் என்று செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம். அதன்படியே தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபின் செயலாளர்கள் மாற்றம் பெரிதாக நடக்கவில்லை. முக்கியமாக புதிதாக மாற்றப்பட்ட துறைகளுக்கு புதிதாக செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதை கவனத்தில் கொண்டு தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாற்றம்

மாற்றம்

செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மேகநாத ரெட்டி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

இந்த இடமாற்றம் தொடக்கம்தான். வரும் நாட்களில் மேலும் இடமாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாகவே இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் சட்ட ஒழுங்கு தொடர்பாக தொடர் புகார்களையோ வைத்து வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதன் பொருட்டு சில ஐபிஎஸ் அதிகாரிங்கள் மாற்றமும் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு சில அதிகாரிகள் பற்றி தகவல் சென்றுள்ளது. சில அதிகாரிகள் பற்றி புகார் சென்றுள்ளது. சில அதிகாரிகள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு வேறு முக்கிய துறை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறதாம். இதை எல்லாம் மனதில் வைத்து முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில அதிகாரிகளை மாற்றுவார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+