தமிழகத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை.. தங்கை பிரியங்கா காந்தியும் களமிறங்குகிறார்.. குழு அமைத்த காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ம் ஆண்டில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தமிழகத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. மேலும் ராகுல் காந்தியின் பாதயாத்திரையை ஒருங்கிணைக்கும் வகையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் வருமாறு:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் மாவட்ட வாரியாக நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். மேலும் மாவட்ட செயலாளர் கூட்டம், பூத் அளவில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

tamil-nadu-congress-announces-team-for-rahul-gandhi-padayatra-in-all-over-tamil-nadu-ahead-of-assemb

அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதேபோல் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மாவட்ட வாரியாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொதுக்கூட்டங்களை மீண்டும் நடத்த திட்டமிட்டு வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி அமைதியாகவே இருந்தது. காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில் பிரசார வியூகம் உள்ளிட்ட எதையும் முன்னெடுக்காமல் மவுனமாக இருந்து வந்தது.

இந்நிலையில் தான் இன்று திடீரென்று முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்க உள்ளார். அதேபோல் பிரியங்கா காந்தி மகளிர் பேரணியை நடத்த உள்ளார் என்று அறிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பணியை தீவிரமாக தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் பாதயாத்திரையை ஒருங்கிணைப்பதற்காக கீழ்கண்ட குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

நிதிக்குழு - கே.வீ. தங்கபாலு

வாகன வசதி ஏற்பாட்டுக்குழு - சு. திருநாவுக்கரசர்

வரவேற்புக்குழு - எம். கிருஷ்ணசாமி

விளம்பரக்குழு - கே.எஸ். அழகிரி

பிரச்சாரம் மற்றும் அணி திரட்டல் குழு - சா. பீட்டர் அல்போன்ஸ்

மாநாட்டு திடல் அமைப்பு, தங்குமிடம், உபசரிப்பு குழு - ரூபி ஆர். மனோகரன் எம்.எல்.ஏ.

மேலும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணி சிறப்பாக நடத்திட கீழ்கண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது.

எஸ். ஜோதிமணி, எம்.பி. - தலைவர்

சுதா ராமகிருஷ்ணன், எம்.பி. - உறுப்பினர்

கே. ராணி, முன்னாள் எம்.பி. - உறுப்பினர்

ஹசீனா சையத், தலைவர், மகிளா காங்கிரஸ் - உறுப்பினர்

தாரகை கத்பர்ட், எம்.எல்.ஏ. - உறுப்பினர்

ராணி வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ - உறுப்பினர்'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+