தமிழகத்தில் சூப்பர் மாற்றம் இன்று.. கிடுகிடுத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.. குறைந்தது கொரோனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்திற்கு கீழ் என்று நீடித்து வருகிது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அளவு இன்று 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரானாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் இன்று 6500ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது.

டிஸ்சார்ஜ் மிக அதிகம்

டிஸ்சார்ஜ் மிக அதிகம்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 6,599 பேர் குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,16,715
ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1097 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 1087 பேரும், சேலத்தில் 552 பேரும் கடலூரில் 346 பேரும், விழுப்புரத்தில் 324 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை பலி எண்ணிக்கை

இதுவரை பலி எண்ணிக்கை

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 87 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 18 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் 9 பேரும், சேலம் மற்றும் வேலூரில் தலா 6 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர். திண்டுக்கல், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் தலா 3 பேர் பலியாகி உள்ளனர்.

எவ்வளவு நோயாளிகள்

எவ்வளவு நோயாளிகள்

தமிழகத்தில் இன்று 83,266 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 54,62,277 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 81,066 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 52,85,823 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 4,74,940 பேரில் 4,16,715பேர் குணம் அடைந்துவிட்டனர். 8,012 பேர் பலியாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் தற்போது 50,213

கோவையில் உயர்வு

கோவையில் உயர்வு

சென்னையில் இன்று ஒரே நாளில் 988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 143602 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் தற்போது 11029 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 446 பேரும், கடலூரில் 407 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும், திருவாரூரில் 277 பேரும் திருவண்ணாமலையில் 242 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+