ஜூனில் ஓய்வு பெறும் டிஜிபி சைலேந்திரபாபு.. டிஎன்பிஎஸ்சி தலைவராகிறாரா? வெளியான பரபர தகவல்.. விவரம்
சென்னை: தமிழ்நாடு டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. குரூப்-1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் காலியாகும் பணியிடங்களின் விவரங்களை பெற்று காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆண்டு தோறும் கால அட்டவணைப்படி டி.என்.பி.எஸ்.சி இத்தகைய தேர்வுகளை நடத்தி வருகிறது. டி.என்.பி.எஸ்.சி நடத்தும் இந்த தேர்வுகளை தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுதி வருகின்றனர்.
டி.என்.பி.எஸ்.சியில் தற்போது தலைவர் பணியிடம் காலியாக உள்ளது. ஒரு தலைவர் 13 உறுப்பினர்கள் பணிபுரியும் இந்த அமைப்பில் 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். இதில், 4 பேரில் ஒருவர் தற்காலிக தலைவராக இருந்து வருகிறார். மீதம் உள்ள 3 உறுப்பினர்களில் கிருஷ்ண குமார் என்ற உறுப்பினர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைய உள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த டி.என்.பி.எஸ்.சிக்கு தலைவர் பதவியை உடனே நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி அமைப்பில் காலியாக இருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவி விரைவில் நிரப்பப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது தமிழக காவல்துறை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வரும் ஜூன் மாதம் சைலேந்திர பாபு டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில், அதன்பிறகு டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. டிஎன்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அதிகபட்ச வயது வரம்பு 62 ஆகும். தற்போது டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபுவின் வயது 59 ஆகும். எனவே மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சைலேந்திரபாபு தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்புகள் அதிகம் உள்ளதாக டி.என்.எபி.எஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
நேர்மையான அதிகாரியாக அறியப்படும் சைலேந்திர பாபு, தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருவதுண்டு. எனவே, சைலேந்திரபாபு டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமனம் செய்யப்படலாம் என்று வெளியாகி இருக்கும் தகவல் தேர்வர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications