ரொம்ப முக்கியம்.. பள்ளி ஆசிரியர்கள் எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பறந்த உத்தரவு.. அன்பில் மகேஷ் அதிரடி
சென்னை: பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை எல்லாம் முடிந்து பள்ளிகள் தொடங்கி நடந்து வருகின்றன. காலாண்டு தேர்வுகளுக்கான பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் காலாண்டு தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பள்ளிகள் தொடக்க நாட்களில் 2 வாரம் தாமதமாக தொடங்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது.

அதன்பின் பள்ளிகள் தொடங்கியும் கூட மழை காரணமாக முதல் சில நாட்கள் பள்ளிகள் நடத்தப்படுவதில் சிக்கல் இருந்தது. அதை ஈடு கட்ட தற்போது சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க சனிக்கிழமைகளில் அடிக்கடி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலாண்டிற்கு முன் அதற்கான பாடத்திட்டங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் முக்கியமான உத்தரவு ஒன்றை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
முக்கிய உத்தரவு: இந்த நிலையத்தில்தான் பள்ளி கல்வித்துறை சார்பாக முக்கியமான உத்தரவு ஒன்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சென்றுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் அனைவரும் தமிழிலே கையொப்பமிட வேண்டும்; ஆவணங்கள், வருகைப்பதிவு மற்றும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்;
டி.பி.ஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அனைத்து இடங்களிலும் பெயரையும், கையொப்பத்தையும் தமிழிலேயே இட வேண்டும்! -2021 அரசாணையைக் குறிப்பிட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. அந்த உத்தரவில், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி அனைத்து இனங்களிலும் தங்களின் பெயர்களை எழுதும் போதும், ஒப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பம் இடப்பட வேண்டும் என்று மீண்டும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்னொரு முக்கிய திட்டம்: இது போக நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும் இருப்பில் வைப்பதும் வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் என இரு மொழிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கென இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உள்ள பாடங்களை 17,000 கருப்பொருள்களாக வகுப்புகள் வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
நாட்டிலேயே முதன் முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுனர்களைக் கொண்டு உருவாக்கியுள்ள இத்தகைய செயலி இதுவே. இச்செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் இணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம்.இந்த முன்னெடுப்பின் மூலம் 25 வட்சம் மாணவர்கள் பயன்டைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு கூறி உள்ளது. 17,000 கருப்பொருள்களாக சிறு சிறு வீடியோக்களாக இதை பிரித்து உள்ளனர். அதை வைத்து வீடியோக்களை உருவாக்கி உள்ளனர்.

மாணவர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அவர்கள் எளிதாக பாடம் கற்க முடியும். மாணவர்களுக்கு வீடியோவிலேயே விளக்கங்கள் இருக்கும். இது போன்ற வீடியோக்களை தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.ஆனால் அந்த வீடியோக்களை பார்க்க பல லட்சம் ரூபாய் தேவைப்படும். பல லட்சம் பீஸ் கட்டி அந்த வீடியோக்கள் பார்க்க சேர வேண்டும். ஆனால் அதை இலவசமாக தமிழ்நாடு அரசு வீட்டிலேயே இருந்து பார்க்கும் விதமாக உருவாக்கி உள்ளது.
இதனால் மாணவர்கள் யாரும் பாடத்திட்டங்களை மிஸ் செய்ய முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications