சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சில தொகுதிகளில் தேர்தலை நிறுத்தப் பார்த்தது அதிமுக.. ஆணையம் உடன்படவில்லை.. ஸ்டாலின் பரபர பேட்டி

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Recommended Video

    #ELECTION BREAKING வரிசையில் நின்று வாக்களித்தார் மு.க.ஸ்டாலின்!

    சட்டசபை தேர்தலையொட்டி தனது மகன் உதயநிதி ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார் ஸ்டாலின்.

    பிறகு, செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது ஸ்டாலின் கூறியதாவது:

    ஆர்வத்தோடு ஓட்டு

    ஆர்வத்தோடு ஓட்டு

    குடும்பத்தோடு வந்து எங்கள் ஜனநாயக கடமையாற்றியுள்ளோம். தமிழகம் முழுக்க அமைதியாக, மக்கள் ஆர்வத்தோடு மக்கள் ஓட்டுப் போட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    சிறப்பாக இருக்கும்

    சிறப்பாக இருக்கும்

    இதனுடைய முடிவுகள் மே 2ம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள் என்பதுதான் எழுச்சியாக வாக்களிக்க காரணம் என்றார்.

    எத்தனை தொகுதி

    எத்தனை தொகுதி

    எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள் என்ற கேள்விக்கு, என்னைவிட ஊடகத்தில் இருக்கும் உங்களுக்கு தான் தெரியும் . நீங்கள் சொன்னீர்கள் என்றால் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

    தேர்தல் ஆணையம்

    தேர்தல் ஆணையம்

    5 தொகுதிகளில் தேர்தலை நிறுத்த அதிமுக வழங்கிய புகார் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ஆளும் கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு புகார் கொடுத்தனர். ஆனால் நடக்கவில்லை. பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.

    English summary
    DMK chief MK Stalin says, Tamil Nadu election results will be great and people coming to the polling booth due to anti incumbency on the ruling party.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X