குட்கா, பான் மசாலா.. புகையிலை பொருட்களுக்கான தடை - மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு! தமிழக அரசு உத்தரவு
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி, குட்கா, பான் மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்கான தடை மே 23, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் படி, 2013 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி முதல் புகையிலை மற்றும் நிக்கோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடையானது, 2025 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த அறிவிப்பு காலாவதியாகி விட்ட நிலையில் மீண்டும் தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் புகையிலை மற்றும் நிக்கோடினை சேர்மமாக கொண்ட உணவு பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது தொடரும்.
குட்கா, பான் மசாலாவை ஒழிக்க தமிழக காவல்துறை, உணவுப் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications