கோவையில் நடந்த உலகப் புத்தொழில் மாநாடு..தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு சத்தமில்லாமல் நடந்த நல்ல விஷயம்
சென்னை: கோயம்புத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ந் தேதி உலகப் புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் பல தொழில் ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்புள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "கோயம்புத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 9-ந் தேதி உலகப் புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த மாநாடு அமைந்துள்ளது.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு நாடுகளில் இருந்து புத்தாக்க தொழில் நிபுணர்கள், நிறுவனங்கள், புத்தாக்க சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புத்தொழில் சூழல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றார்கள்.
இந்த தொடக்க விழாவில், தமிழ்நாட்டில் முதலீட்டு சூழலை வலுப்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டில் 'இணை உருவாக்க நிதியத்தை' முதல்-அமைச்சர் அறிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் அதிகமாகி, உலகின் பிற இடங்களில் உள்ள துணிகர முதலீட்டு நிறுவனங்களை தமிழ்நாட்டை நோக்கி ஈர்ப்பதற்கு வழிவகுக்கும்.
அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானிய நிதிக்கான ஒப்புதல் ஆணைகள் வழங்கபட்டன. 2 நாட்கள் மாநாட்டில் 72 ஆயிரத்து 278 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இது நாட்டின் மிகப்பெரிய புத்தொழில் மாநாடாக அமைந்தது.
115 முதலீட்டாளர்கள் பங்கேற்று, 453 புத்தொழில் நிறுவனங்களிடம் தங்களது நிறுவனங்களை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகள் வழிகாட்டுதல் மற்றும் இணைப்பு முயற்சிகள் உருவாக்கப்பட்டன. மாநாட்டுக்கு முன்பதாகவே ரூ.127.09 கோடி முதலீட்டு உறுதிப்பாடு கிடைத்தது. மேலும் பல ஒப்பந்தங்கள் அடுத்தடுத்த மாதங்களில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,012 அரங்குகளுடன் புத்தொழில் மற்றும் புத்தாக்க கண்காட்சி நடைபெற்றது. 21 நாடுகளில் இருந்து அரங்குகள் அமைத்திருந்தனர். 12 பெரு நிறுவனங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த 8 புத்தொழில் இயக்கங்கள் பங்கேற்று இருந்தன.
பன்னாட்டு தொழில் அமைப்புகள் மற்றும் முன்னணி பெரு நிறுவனங்கள் பலவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதனால் தமிழ்நாட்டில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் இலக்கை நோக்கி நகர்த்தும் முக்கிய அடித்தளமாக அமைந்தது. மாநாட்டின் நிறைவு விழாவில் 2-ம், 3-ம் நிலை நகரங்களில் புதிய புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தில் 10 நிறுவனங்களுக்கு அனுமதி ஆணைகளை மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் வழங்கினார்" இவ்வாறு தமிழக அரசு அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications