மெரினாவில் பிரமாண்டம்.. சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க முடிவு! உங்கள் பெயர் இடம்பெற நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை எதிரே ஹுமாயூன் மாஹாலில் 80,000 சதுரஅடியில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கு பழங்கால பொருட்களை நன்கொடை வழங்குவோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

75 வது சுதந்திர தினத்தின்போது முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கொடியேற்று மாநில மக்களுக்கு உரையாற்றினார். மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

Tamil Nadu Govenrment annouces to set up Independence day museum at Marina Beach in Chennai

இதையடுத்து சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலை போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையம், பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் 75வது சுதந்திர தினவிழா உரையின்போது அறிவித்தார்.

அதன்படி சென்னை மெரினா கடற்கரையின் எதிரே, பாரம்பரிய கட்டடமான ஹுமாயூன் மஹாலில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைவப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்து பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐஎன்ஏ சீருடைகள், ஐஎன்ஏ அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் பான்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம்.

தங்கம் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே பொதுமக்கள தங்களிடம் உள்ள சுதந்திர போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்துக்க நன்கொடையாக வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+