இமாலய சாதனை.. 2 ஆண்டுகளில் 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு.. ரெக்கார்ட் படைத்த சேகர் பாபு.. ஆஹா!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் 1,000 ஆவது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு வருகின்ற 10 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால் தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.
அதோடு கோவில் நிலங்கள் கடந்த இரண்டு வருடங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் கணக்கில் மீட்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. கோவில் சொத்துக்கள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முறையாக இணையத்திலும் பதிவேற்றப்பட்டு வருகிறது. அனைத்து கோவில் சொத்து விவரங்களும் இணையத்தில் ஏற்றப்பட்டுள்ளது.
கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணையத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயில்களுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
முக்கிய அறிவிப்பு: இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.80.56 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு கூட சமீபத்தில் வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம். உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 999 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன என்று அறிவித்தார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் 1,000 ஆவது குடமுழுக்கு விமர்சையாக நடைபெற உள்ளது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் கோயில்களைப் புனரமைத்து திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது; அந்த வகையில், 1,000 ஆவது குடமுழுக்காக சென்னை மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு வருகின்ற 10 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகும். காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பிறகும், இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம்தக்கோலம்அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும், திருநெல்வேலி மாவட்டம் அரிகேசவநல்லூர் கோவிலிலும் 100 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடைபெற்றது என்று தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications