அங்கன்வாடி மைய பணி நேரத்தில் மாற்றம்! காலை 9 டூ பகல் 12.30 வரை! தமிழக அரசு உத்தரவு
சென்னை: அங்கன்வாடி மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை செயல்பட அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதை தொடர்ந்து LKG மற்றும் UKG வகுப்புகளில் தற்காலிகமாக பணிபுரியும் மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான கீழ்க்கண்ட கோரிக்கைகள் விதிகளுக்குட்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி மையத்தின் பணி நேரம் காலை 9 முதல் மதியம் 12.30 வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் சார்ந்த ஆசிரியர்களுக்கு மின்னணு நிதி (ECS) பரிமாற்ற முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தற்காலிக ஆசிரியர்களுக்கு பிரதி மாதம் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக் கூடாது. இவ்வாறு முதல் தேதியிலேயே ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டவாறு மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் மாதம் முழுவதும் பணிபுரிந்த காலத்தைக் கணக்கிட்டு ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் மழலையர் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக சிறப்பாசிரியர்கள் பணிபுரியும் பள்ளியின் மூலம் கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை (EMIS) தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை EMIS எண் பெறாதவர்கள் உடனடியாக பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியர் மூலம் பள்ளி பயன்பாட்டிலுள்ள Login-ல் ஆசிரியரின் விவரத்தினை பதிவேற்றம் செய்து EMIS எண் பெற சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கண்ட மையங்களில் பணிபுரியும் தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் EMIS எண் பெற்ற விவரத்தினை மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications