அரசின் வருவாயை உயர்த்த கோவில் தங்க நகைகள் உருக்கப்படுகிறதா? தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் வருவாயை உயர்த்த கோவில் நகைகள் தங்க கட்டிகளாக உருக்கப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், முற்றிலும் பொய்யான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி அவற்றினை அரசு என்ன செய்கிறது என்றும் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்த வகையில் வருடத்துக்கு ரூ.6 கோடி வருமானம் வருவதாகவும் இந்த திட்டம் முழுமை பெறும்போது ரூ.25 கோடி வருவாய் கிடைக்கும் என கூறியிருந்தார். இதுபற்றி அப்போது அறிக்கை வெளியிட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் நகைகளை உருக்கி டெபாசிட் செய்த வகையில் வருடத்துக்கு ரூ.6 கோடி வருமானம் வருவதாகவும் இந்த திட்டம் முழுமை பெறும்போது ரூ.25 கோடி வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

gold temple jewellery

இந்தத் திட்டம் இதுவரை வெளியில் தெரியாமல் மறைவாக செயல்படுத்தப்பட்டது என்பதே அதிர்ச்சியான விஷயம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஆட்சியாளர்கள் பார்வை கோயில் சொத்தின் மீது அழுத்தமாக பதிந்தது. நகை உருக்கும் திட்டம் குறித்து தெரியவந்ததும் இந்து முன்னணி சார்பில் சில சந்தேகங்களை கேள்வியாக எழுப்பி இருந்தோம்.

ஆனால் அதற்கான எந்த பதிலையும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அளிக்கவில்லை. இது மேலும் பல சந்தேகங்களை பக்தர்களிடம் எழுப்பி வருகிறது. அதில் சிலவற்றை ஊடகங்கள் மூலம் மீண்டும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நகைகள் 24 காரட் சுத்தமான தங்கமாக இருக்காது. எனவே, அதனை உருக்கும் போது கிடைத்த தாமிர உலோகத்தை என்ன செய்தார்கள்? தங்கநகையில் இருந்த நவரத்தினங்கள் வைரம் போன்றவற்றை டெபாசிட் செய்தார்களா? அது என்ன வகையில் கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது? உருக்குவதற்கு முன் தங்கத்தின் அளவு, உருக்கிய பின்னர் கிடைத்த தங்கத்தின் அளவு ஆகிய தகவல்களை பகிரங்கமாக ஏன் வெளியிடவில்லை?

அமைச்சர் தரும் தகவல்கள் பொத்தாம் பொதுவாக இருக்கிறது என்றே நிபுணர்கள் கருதுகின்றனர். தெளிவான முழு தகவல் இல்லாத காரணத்தால் இதன் பின்புலம் பற்றி ஆராய வேண்டியுள்ளது என்றே கருத இடமிருக்கிறது. தங்கத்தை இருப்பு வைத்துள்ள முழுவிவரம், அதற்கான வட்டி விகிதம், கிடைக்கும் வருவாய் எங்கு எதற்கு செலவிடப்படுகிறது? ஆகியன பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அரசின் கடமை. மேற்கண்ட சந்தேகங்களை தெளிவுபடுத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரைக் கேட்டு கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

இதனிடையே அண்மைக் காலமாக தமிழக அரசின் வருவாயை உயர்த்த கோவில் நகைகள் தங்க கட்டிகளாக உருக்கப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வேகமாக பரவியது. இதனை தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், முற்றிலும் பொய்யான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி வெளியிட்ட பதிவில், "தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் நிர்வகிக்கப்படும் கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, அவற்றை வங்கிகளில் முதலீடு செய்து வட்டி தொகை பெறப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த கோவில்களின் பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். அந்த வருவாயை அரசு பயன்படுத்த முடியாது" என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+