போனஸ் மழையா கொட்டுதே.. அரசு ஊழியர்களுக்கு அடுத்த தீபாவளி ஸ்வீட் தந்த ஸ்டாலின்.. சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் "C" மற்றும் "D" பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67% ஆக 20% 2023-224-இல் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.

Tamil Nadu government gave bonuses for Tamil Nadu Civil Supply Corporations Workers

போனஸ் அறிவிப்பு; போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இது தவிர தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள், கிடங்குகள், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ஆணையிடப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக
தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசு போனஸ்: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் நடப்பாண்டிலும் 10% போனஸை அரசு அறிவித்தது. ஆனால் இந்த போனஸை 20% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இது போக விரைவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் போனஸ் உயர்த்தி வழங்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+