இலாகா இல்லாத அமைச்சர்! செந்தில் பாலாஜியை ஏற்காத ஆளுநர்.. விடாத தமிழக அரசு! கையில் புதிய பிளான்! ஆஹா
சென்னை: செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க தமிழக அரசு புதிய பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்நிலையில் தான் அவரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது செய்த முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமலாக்கத்துறையினர் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. இதயத்துக்கான ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் சிறை காவலர்கள் பாதுகாப்பில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் செந்தில் பாலாஜி கைதானதால் அவரது துறைகளை மாற்றி அமைக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார்.
இதையடுத்து செந்தில் பாலாஜி நிர்வகித்த மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரிந்துரை செய்தார். மேலும் செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக இருக்கவும் முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்தார்.
இதில் இலாக்கா மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்தார். மாறாக செந்தில் பாலாஜியை துறைகள் இல்லாத அமைச்சராக நீடிக்க ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை உள்ளதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தமிழக அரசு இதனை விரும்பவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக செந்தில் பாலாஜி உள்ள நிலையில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய தமிழக அரசு விரும்பவில்லை. இதனால் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க தமிழக அரசு புதிய பிளான் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது நிர்வாக ரீதியாக செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிர்வாக ரீதியாக என்பது முதல்வரின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடர வைப்பது போன்றதாகும் என கூறப்படுகிறது. ஒருவேளை இது பலனளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை துவங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications