தமிழகத்தில் 75 லட்சம் ORS பாக்கெட்டுகள் ரெடி! வெயிலைச் சமாளிக்க ஆயிரம் மையங்கள்!
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வருவதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
அதைப்போல வானிலை ஆய்வு மையமும் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் மையங்களை அமைத்து ஒஆர்எஸ் (Oral Rehydration Solution) கரைசலைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வேலைகளில் இறங்கி உள்ளது தமிழ்நாடு அரசு.
அது என்ன ஒ.ஆர்.எஸ்? அதனால் என்ன பயன்? அதை எப்படி எடுத்துக் கொள்வது? எவ்வளவு எடுத்துக் கொள்வது போன்ற பல சந்தேகங்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அதற்காக விளக்கத்தைப் பொதுச்சுகாதார இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர், "முன்பே இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக 2286 ஆரம்பச் சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை மூலமாக ஓ.ஆர்.எஸ் பவுடர்களை கொடுத்துக் கொண்டுள்ளோம்.

அது மட்டுமே போதாது. மக்கள் அதிகம் கூடுகின்ற பேருந்து நிலையம், சந்தை போன்ற இடங்களைக் கண்டறிந்து அங்கேயும் விநியோகிக்க இருக்கிறோம். அதற்காகக் கூடுதலாக ஆயிரம் இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். ஊராட்சி மற்றும் நகராட்சி ஆகிய நிர்வாகத்தினருடன் இணைந்து இதைச் செய்ய உள்ளோம்.
இதன் ஊழியர்கள் கோடையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தரமான நீர்ப்பந்தல் அமைத்து உள்ளனர். அத்துடன் இந்த ஒ.ஆர்.எஸ். பவுடர் கரைசலையும் மக்களுக்குக் கொடுப்பார்கள்" என்கிறார்.
அது சரி, இந்த ஓ.ஆர்.எஸ் பவுடரை யார் எல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
இதற்குத் தொடர்ந்து பதிலளிக்கிறார் டாக்டர் செல்வவிநாயகம், "இந்த பவுடரை எல்லா வயது பிரிவினரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த வெயில் காலங்களில் நம் உடலிலிருந்து அதிக வியர்வை வெறியேற்றும்.

அதனால் உப்பு அளவு குறையும். அதைச் சமன்படுத்தவேதான் இந்த ஒ.ஆர்.எஸ் கொடுக்கிறோம்.
இதன் அளவைப் பொறுத்தவரைப் பயம் தேவை இல்லை. இதன் தன்மையே என்னவென்றால், உங்களுக்கு எவ்வளவுத் தேவையோ அதை உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்களே உணர்த்தும். அதற்கு ஏற்ப நீங்கள் இயற்கையாகவே எடுத்துக் கொள்வீர்கள்" என்றார்.
அதிகம் எடுத்துக் கொள்வதால் ஆபத்து ஒன்றும் இல்லை?
"நிச்சயம் இல்லை. நம்மிடம் ஒ.ஆர்.எஸ் பொட்டலங்கள் கிட்டத்தட்ட 77 லட்சம் வரை உள்ளன. அது போதாத பட்சத்தில் கூடுதலாகக் கொள்முதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது அரசு.

ஆகவே, இதற்காக ஊருக்கு ஊர் இடங்களைத் தேர்வு செய்து வழங்கும் போது குறைந்தது 100 பாக்கெட்டுகளாவது கைவசம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.
அனைத்து மாவட்டங்களிலும் இதை வழங்க ஆரம்பித்துவிட்டோம். தலைவலி வருகிறது. மயக்கம் வருகிறது. கைகால்களில் தசைப் பிடிப்பது வருகிறது. உடல் சோர்வு வருகிறது. தலைப்பாரம் ஏற்படுகிறது இப்படி அனைத்துமே இந்த வெயில் தாக்கத்தின் அறிகுறிகள்தான். இப்படி உள்ளபோது உரிய அளவு நீர் எடுக்க வேண்டும்.
நீர்ச்சத்து உள்ள பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதை மீறி உபாதை வந்தால் அலட்சியம் கூடாது. உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்" என்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications