தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்.. அதிரடியாக நீக்கப்பட்ட 44 லட்சம் பேர்.. பின்னணி
சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக, இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 44 லட்சம் பேரை நீக்கியுள்ளது. சுமார் 1 கோடியே 46 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே தகுதி உள்ளவர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்தது. அதன்பிறகு சரியாக ஐந்து ஆண்டுகள் கழித்து, அதாவது 2023ம் ஆண்டு தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. ஏனெனில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேர்தல் நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட கூட்டுறவு வழக்குகளுக்கான மண்டலக் குழுக்கள் ஆகியவற்றில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையத்திற்கும் புகார்கள் வந்தன. இந்த புகார்களில் பல, வாக்காளர் பட்டியல் அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடவடிக்கைகளை சரிவர நடத்தவில்லை என்றும் முறையாக கண்காணிக்கவில்லை என்ற புகார்கள் வந்தன. இந்த புகார்களை விசாரித்த உயர்நீதிமன்றம் மற்றும் கூட்டுறவு வழக்குகளுக்கான மண்டல குழுக்களும் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில், கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர்களை ஆய்வு செய்யும் பணியினை தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையத்தால் மேற்கொண்டது.
கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன்படி, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடியே 23 லட்சமாக இருந்தது. இந்த நிலையில், ஆய்வுகளின் அடிப்படையில், இறந்த உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் மீண்டும் உறுப்பினர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் 44 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
மீதமுள்ள 1 கோடியே 79 லட்சம் உறுப்பினர்களில் தற்போது 1 கோடியே 46 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே தகுதி உடைய கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சுமார் 33 லட்சம் பேர் ஆதார் எண் வழங்காமல் இருக்கிறார்கள் அவர்களை பட்டியலில் சேர்ப்பதாக வேண்டாமா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அவர்கள் தங்களது ஆதார் விவரங்களை வழங்கும்பட்சத்தில், தகுதி வாய்ந்த உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தஞ்சாவூரில் 3.23 லட்சம் உறுப்பினர்களும், மதுரையில் 2.52 லட்சம் உறுப்பினர்களும், சேலத்தில் 2.09 லட்சம் உறுப்பினர்களும், திருச்சியில் 2.08 லட்சம் உறுப்பினர்களும், சிவகங்கையில் 2.03 லட்சம் உறுப்பினர்களும் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்..
அதேபோல் மொத்தம் உள்ள 1 கோடியே 46 லட்சம் உறுப்பினர்களில், சேலத்தில் அதிகபடியாக 10.8 லட்சம் உறுப்பினர்களும், திண்டுக்கல்லில் 7.12 லட்சம் உறுப்பினர்களும், கடலூரில் 6.66 லட்சம் உறுப்பினர்களும், திருச்சியில் 5.92 லட்சம் உறுப்பினர்களும் மற்றும் கன்னியாகுமரியில் 5.68 லட்சம் உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் பட்டியல் (வாக்காளர் பட்டியல்) சரிவர தயார் செய்யப்பட்டவுடன், விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications