சைவ ஹோட்டல்களில் மட்டுமே.. இனி அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும்! தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: நெடுஞ்சாலைகளில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்களுக்கான உரிமம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நெடுந்தூர மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது, இந்த விரைவு பேருந்துகள் சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம்.

உணவகங்கள்
பொதுவாக அரசு பேருந்துகள் உரிமம் பெற்ற உணவகங்கள் அருகில் தான் பேருந்துகளை நிறுத்த வேண்டும். இருப்பினும், இது போன்ற உணவகங்களில் மோசமான தரத்தில் உணவு விற்பனை செய்யப்படுவதாகவும் விலையும் அதிகமாக இருப்பதாகவும் பல காலமாகவே புகார்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற நெடுஞ்சாலை உணவகங்களுக்கான உரிமம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

சைவ உணவு
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் உணவகங்களுக்கு ஒரு ஆண்டிற்கு உரிமம் வழங்கப்படும். உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் உணவகங்களுக்கு ஒரு ஆண்டிற்கு உரிமம் வழங்கப்படும். உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
பயோ கழிவறை இருக்க வேண்டும். பேருந்துகள் உணவகத்தில் இருந்து வெளியே வரும் போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையில் இருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும் படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமிராக்கள் பொருத்தி இருக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இருக்க வேண்டும்.

ரசீது கட்டாயம்
உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்குத் தெரியும் படி வைக்கப்பட வேண்டும். பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் மற்றும் உணவில் வாங்கும் பொருட்களுக்கும் கணினி மூலம் ரசீது தர வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும். பயணிகள் அருந்துவதற்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

நிபந்தனைகள்
பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது. உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம்.ஆர்.பி விலையை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டு உள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விதித்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications