மக்களே இந்த நம்பரிலிருந்து போன் கால் வருதா? தயவு செய்து எடுத்துடாதீங்க! சைபர் கிரைம் போலீஸ் வார்னிங்
சென்னை: அறியப்படாத இண்டர்நேஷனல் வாட்ஸ் அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
முன் பின் தெரியாத இத்தகைய அழைப்புகள் வந்தால் அதனை ஏற்க மறுப்பதோடு அது குறித்த விவரங்களை 1930 என்ற எண்ணிற்கு அழைத்து தெரிவிக்க வேண்டும் எனவும் சைபர் கிரைம் பிரிவு போலீஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். தொழில்நுட்ப வசதியை தங்களுக்கு சாதமாக்கிக் கொள்ளும் மோசடி கும்பல்கள் படிப்பறிவில்லாத சாமானியர்கள், குறிப்பாக பெண்கள், கிராமப்புற மக்களை குறி வைத்து தங்கள் மோசடியை அரங்கேற்றி வருகின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் இந்த கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றன. முன் பின் தெரியாத வெளிநாட்டு வாட்ஸ் அப் கால்களை அட்டெண்ட் செய்வதன் மூலம் செல்போனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுகள், வங்கிக்கணக்கு விவரங்கள், உள்ளிட்ட இன்னும் பல முக்கிய ஆவணங்களுக்கு ஆபத்தாக மாறலாம்.
அதனால் இந்த விவகாரத்தில் தமிழக மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் தடுப்பு பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் வங்கியிலிருந்து பேசுகிறோம் லோன் வேண்டுமா எனக் கேட்டு மெல்ல உங்கள் ஆவணங்கள் குறித்த விவரங்களை நீங்கள் அறியாமலே உங்களிடமிருந்து பெற வாய்ப்புகள் இருக்கின்றன.
இதனால் செல்போன் பயன்பாடு மற்றும் அதை இயக்குவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முன் பின் தெரியாத நபர்கள் தொடர்ந்து அழைத்து தொந்தரவு செய்தால் உடனடியாக சைபர் கிரைம் பிரிவு போலீஸை நாட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications