Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AAY, PHH ரேசன் கார்டு வச்சிருக்கீங்களா? மாதம் 1000 ரூபாய் வேண்டுமா? சனிக்கிழமை ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது விநியோக திட்ட பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவை மேற்கொள்ள வரும் சனிக்கிழமை (14ஆம் தேதி) சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வட்ட அலுவலகங்களிலும், சென்னையில் மண்டல அலுவலகங்களிலும் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.

Ration Card tamilnadu govt chennai

ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன. ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழக முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொது விநியோக திட்ட பயனாளிகளுக்காக வரும் சனிக்கிழமை (14ஆம் தேதி) சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும். தமிழகம் முழுவதும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

அதன்படி ஜூன் 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 14.06.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ரேஷன் கார்டு அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதிதாக திருமணமானவர்கள், புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+