Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயிற்றுக்கும் ஆங்கே ஈயப்படும்.. பட்டினியோடு படிக்க வேண்டாம்! காலை உணவுத் திட்டம்.. மெனுவில் மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு அரசின் நலத் திட்டங்களை இன்றே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகிழ்ச்சி தரும் அறிவிப்பாக காலை சிற்றுண்டியில் மாணவர்களுக்கு உப்புமாவிற்கு பதிலாக வெண் பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் இன்று முதல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி செல்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பொது தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

Tamil Nadu Schools Reopen tn govt

தொடர்ந்து ஜூன் இரண்டாம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏற்கனவே மாணவர்களை வரவேற்கும் வகையில் பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் சில பள்ளிகளில் வாழைமரம், தோரணம் கட்டி அரசு பள்ளி மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். பள்ளி திறக்கப்படும் இன்றே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, காலணிகள், காலுறைகள், வண்ண பென்சில், கணித உபகரண பெட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த பொருட்கள் மாவட்ட தலைமை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று தலைமை ஆசிரியர் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நலத்திட்ட பொருள்களை வழங்குகின்றனர். பள்ளி திறக்கும் இன்று முதல் புதிய இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் வரை பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் காலையில் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு மெனு மாற்றப்பட்டிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சத்தான காலை உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 1545 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்களுக்கு திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் ரவை, கோதுமை, சேமியா, அரிசி உப்புமா ஆகியவை ஏதாவது ஒன்று வழங்கப்படும் எனவும், செவ்வாய்க்கிழமை ரவை, சேமியா, சோளம், கோதுமை கிச்சடி, புதன்கிழமை சாம்பார் உடன் ரவா வெண்பொங்கல், வியாழன் அன்று உப்புமா, வெள்ளிக்கிழமை இனிப்பு கிச்சடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடைய இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டமானது 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது சுமார் 19 லட்சம் மாணவர்கள் வரை பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை தொடர்ந்து காலை உணவுத் திட்டத்தில் மாற்றம் செய்து சமூக நலத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

அதன்படி இனி திங்கட்கிழமை தோறும் உப்புமாவிற்கு பதிலாக சாம்பார் உடன் வெண் பொங்கல் வழங்க வேண்டும் எனவும், இன்று முதல் இந்த திட்டத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்தமான முறையில் உணவுகளை தயாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+