8 வருடங்களாக சுகாதாரத்துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக 8 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த ராதாகிருஷ்ணன் போக்குவரத்துத் துறைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சுகாதாரத்துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூட்டுறவு சங்க பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று மொத்தம் 12 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் இன்று தமிழக அரசால், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Nadu senior IAS officer, Health Secretary J Radhakrishnan transferred

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆக பணியாற்றி வந்த காயத்ரி கிருஷ்ணன் கோயம்புத்தூர் வணிக வரித்துறை இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த பாலச்சந்திரன் பதிவுத்துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளராக பதவி வகித்து வந்த நாகராஜன் தமிழக சுகாதார திட்டங்களுக்கான திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர்கள் பணி தேர்வு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரவன் குமார் ஜதாவத், கோவை மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனராக குமரகுருபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+