குறி தப்பாது! அதற்குள் வேலையை தொடங்கிய ஸ்டாலின்! சென்னை ஏர்போர்ட் ஸ்கிரீனில் என்ன அது? பார்த்தீங்களா
சென்னை: தமிழ்நாட்டில் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இப்போதே அரசு தீவிரமாக தயாராக தொடங்கிவிட்டது.

கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் இந்த முறை சென்னையில் மட்டுமின்றி கோவையிலும் பல்வேறு முக்கிய முதலீடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
மாநாடு நடக்கிறது: ஜனவரி 2024-இல் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இதில் பல முக்கியமான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பட்ஜெட்டை முன்னாள் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட்டில் பல்வேறு முக்கியமான விவரங்களை வெளியிட்டார். முக்கியமான சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
ரெடியாகும் அரசு: அடுத்த வருடம் நடக்க உள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இப்போதே அரசு தீவிரமாக தயாராக தொடங்கிவிட்டது. முக்கியமாக இப்போதே விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள திரைகளில் ஏற்கனவே சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன .

அங்கே ஸ்டாலின் புகைப்படத்தோடு தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்கள் ஒட்டப்பட்டு உள்ளன. முதலீட்டாளர்கள் பலரை வரவேற்கும் விதமாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
COUNTDOWN BEGINS FOR TAMIL NADU GLOBAL INVESTORS MEET - The state government has started branding activities at the Chennai airport for the upcoming investors meet in January 2024 pic.twitter.com/2D6bGjyK72
— Sangeetha Kandavel (@sang1983) November 9, 2023
இதையடுத்து வரும் நாட்களில் சென்னையில் பிரம்மாண்ட அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் கூகுள், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் வேறு சில சர்ப்ரைஸ் அறிவிப்புகள் கூட இந்த மாநாட்டில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications