பள்ளி திறக்கும்.. வகுப்பு நடக்காது? தொடரும் ஆசிரியர் போராட்டம்! முதல் நாளே மாணவர்கள் பாதிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜனவரி 5) மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையிலும், "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSTA) சார்பிலான போராட்டம் நிறுத்தப்படாது என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

டைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கடந்த 10 நாட்களாக சென்னை சிவானந்தா சாலையில் அமைதியான போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களுடன் அவர்களின் குடும்பத்தினரும் இதில் கலந்துகொண்டு மனித சங்கிலி அமைத்து தங்களது கோரிகைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

Tamil Nadu teachers schools reopen

அரசு கவனிக்காமல் இருப்பதே இந்த போராட்டத்தை நீடிக்கச் செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில், அரையாண்டு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும், போராட்டத்தை கைவிடும் எண்ணமில்லை என்று ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆசிரியர்கள் போராட்டம்

மாறாக, அனைத்து மாவட்டத் தலைமையகங்களிலும் இனி இதைப் போன்ற போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, தமிழக அரசு தங்களை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையைக் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம்

இதுகுறித்து எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே. ராபர்ட் கூறும்போது, "எங்கள் கோரிக்கைக்கு இன்னும் தீர்வு வரவில்லை. பள்ளிகள் திறந்தாலும் போராட்டம் தொடரும். எங்களது அடிப்படை ஊதியத்தில் உள்ள முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும். அதுதான் ஓய்வூதியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல்வர் அறிவித்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அடிப்படை ஊதியம் சரியாக உயர்த்தப்படாத வரை ஓய்வூதியப் பிரச்சினையும் நீடிக்கும்" என கூறியுள்ளார்.

தமிழக பள்ளிகள் திறப்பு

இதனால், ஒரு புறம் மாணவர்கள் பள்ளிக்கு செல்லத் தயாராகும் நிலையில், மறுபுறம் ஆசிரியர்களின் நீடிக்கும் போராட்டம் பள்ளி நிர்வாகங்களுக்கு புதிய சவாலாக உருவாகியுள்ளது. அரசு இந்த பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாணவர்கள் கல்வி பாதிப்பு

இந்த ஆண்டு இல்லாத வகையில் இந்த ஆண்டு மொத்தம் பத்து நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்டவற்றோடு, சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்த்து இந்த ஆண்டு ஜனவரி நான்காம் தேதியான நேற்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதை அடுத்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.

எஸ்எஸ்டிஏ போராட்டம்

இதற்கு இடையே இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. காரணம் இன்று பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு 3ஆம் பருவ புத்தகங்கள், நோட்டுகள்,எழுது பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி முதல் நாளிலேயே பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+