சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மரங்களின் காவலர்' நண்பர் விவேக் இழப்பு.. தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் வலி.. தமிழச்சி உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மரங்களின் காவலர், மனித நேயப் பண்பாளர் விவேக்கின் இழப்பு திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tamilachchi ThangaPandian has said the loss of actor vivek was an irreparable loss to the film industry and the fans

'சின்ன கலைவாணர்' என்று அன்புடன் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எப்படி இருந்த நடிகர் விவேக்... 1982-ல் மதுரையில் கல்லூரி காலத்தில்.... வைரலாகும் போட்டோ எப்படி இருந்த நடிகர் விவேக்... 1982-ல் மதுரையில் கல்லூரி காலத்தில்.... வைரலாகும் போட்டோ

ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்தார். வெறும் நடிகராக மட்டுமின்றி சமூக சேவை செய்தும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி புரிந்து மக்கள் மனங்களை வென்ற விவேக் மறைவுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விவேக்கின் இறப்புக்கு தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்க பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறுகையில், ' சமூகச் சிந்தனையோடு, சீர்திருத்தக் கருத்துக்களையும் தன்னுடைய நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த, இயற்கை நலனில் ஆர்வம் கொண்ட, 'சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்படும், பத்மஶ்ரீ நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

என்ற செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கின்றது. மரங்களின் காவலர், மனித நேயப் பண்பாளர், கலைப்பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்ற அவரது இழப்பு, திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. தனிப்பட்ட முறையில் நல்லதொரு நண்பரை இழந்த, பெரு வலி எனக்கு. அவரை இழந்து வாடுகின்ற குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபமும் என்று தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

English summary
DMK MP Tamilachchi Thanga Pandian has said that the loss of Vivek, the guardian of the trees and humanist educator, was an irreparable loss to the film industry and the fans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X