அரசியலில் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ண கூடாது சம்பந்தம்! கலாய்த்த நெட்டிசன்ஸ்! விஜய்க்கு வந்த "அவசர" தேவை
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்க்கு அவசர தேவை ஒன்று ஏற்பட்டு உள்ளது. அவர் அரசியலில் தொடர்ந்து முறையாக செயல்பட முக்கியமான ஒரு விஷயம் நடிகர் விஜய்க்கு தேவையாகி உள்ளது. அது என்ன விஷயம்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை.

பெஞ்சல் புயல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்ததில், புதையுண்ட மூன்று வீடுகளில் சிக்கியவர்கள் சடலமாக மீட்கப்பட்டச் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது.
அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க போகிறோம்.. மெஜாரிட்டி இடங்களில் வென்று ஆட்சியை பிடிப்போம் , எங்கள் கூட்டணிக்கு வரலாம் என்று கூறிய விஜய் இதுவரை களத்திற்கு செல்லவே இல்லை. இது போன்ற நேரங்களில்தான் கட்சி தொடங்கி ஒருவர் களத்திற்கு சென்று மக்களுடன் நிற்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வளர காரணம் மக்களுடன் நின்றதே. ஆனால் விஜய் அப்படி ஒரு சான்சை மிஸ் செய்துவிட்டார். இந்த ஒரு விஷயம் என்று இல்லாமல் விஜய் அரசியலில் வரிசையாக தவறு செய்து வருகிறார்.
1. நேற்று நிவாரணம் வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு வர சொல்லி அங்கே வைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

2. நான் போனால் கூட்டம் அதிகமாக வரும் அதனால்தான் போகவில்லை என்று சப்பை காரணம் ஒன்றும் இதற்கு கூறினார். பொதுவாழ்விற்கு வந்துவிட்டால் களத்தில் இறங்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். கூட்டத்தை சமாளிக்க வேண்டும். ஆனால் விஜய் அதை செய்யவில்லை.
3. முன்னதாக தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையே தாமதமாக தந்தார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை.
4. அதேபோல் அவர்களுக்கும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார்.
5. பனையூர் கிட்டத்தட்ட விஜயின் கொடநாடு போல மாறிவிட்டது. அதை விட்டு வெளியே வராமல் விஜய் வீட்டிற்குள் முடங்கி கிடப்பது அவரின் அரசியல் எதிர்காலத்திற்கே சிக்கலாக மாறி உள்ளது.

கிண்டல்: இதைத்தான் நெட்டிசன்கள்.. அரசியலில் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ண கூடாது சம்பந்தம்.. ஓட்டு கேட்கவாது மக்கள சந்திப்பாரா இல்ல கட்டுக்கடங்காத கூட்டம் கூடிரும்னு தொகுதி வாரியா மக்கள பணையூர் பங்களாவுக்கு வர சொல்லுவாரா.? Career peak விட்டு வெளில வந்தா மட்டும் பத்தாது.. பனையூர் பங்களாவை விட்டும் வெளில வரணும் என்று விஜய்யை அஜித் ரசிகர்கள், திமுகவினர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய தொடங்கி உள்ளனர்.
அவ்வளவு ஏன் விஜய் ஆதரவாளர்களில் பலரும் கூட பனையூருக்கு மக்களை வரவழைத்ததை ரசிக்கவில்லை. அண்ணா நீங்கள் செய்தது தப்பு என்று பதிவு போடுவதை பார்க்க முடிகிறது.
விஜய்க்கு அவசர தேவை: இப்போது நடிகர் விஜய்க்கு தேவை எல்லாம் ஒரு நல்ல ஆலோசகர். புஸ்ஸி ஆனந்த் கட்சி பணிகளை செய்தாலும் விஜய்க்கு ஆலோசனை வழங்க ஒருவர் வேண்டும்.
எதை செய்ய வேண்டும்.. எதை செய்ய கூடாது. எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. என்றெல்லாம் விஜய்க்கு ஆலோசனை வழங்க ஒருவர் வேண்டும். அப்படி ஒருவர் மிஸ் ஆவது விஜய்க்கு பெரிய அளவில் சிக்கலாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications