ஆதவ் எனும் விஷக்கிருமி.. கலவரத்தை தூண்டும் விஜய்க்கு தர்ம அடி உறுதி.. நாம் தமிழர் பொளீர்!
சென்னை: தன்னை காப்பாற்றிக் கொள்ள ரசிகனை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்த நினைக்கும் ஆதவ் அர்ஜுனனை எல்லாம் கூட வைத்திருந்தால் விஜய் வீதிக்கு வீதி தர்ம அடி வாங்குவது உறுதி என்று நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
கடந்த 24 மணி நேரமாக தமிழக அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் சில இன்ஸ்டாகிராம் influencerகளை வைத்து போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தது. முக்கியமாக கலவரத்தை தூண்டும் வகையில், வதந்திகளை பரப்பும் வகையில் போஸ்டுகளை செய்து கொண்டு இருந்தனர்.

இதற்கு இடையே ஆதவ் அர்ஜுனாவும் நேற்று இரவு கலவரத்தை தூண்டும் வகையில் போஸ்ட் செய்து இருந்தார். தமிழக அரசுக்கு எதிராக பெரிய கலவரம் நடக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து போஸ்ட் செய்து இருந்தார்.
இதையடுத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ரசிகனை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்த நினைக்கும் ஆதவ் அர்ஜுனனை எல்லாம் கூட வைத்திருந்தால் விஜய் வீதிக்கு வீதி தர்ம அடி வாங்குவது உறுதி என்று நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.
ஆதவ் எனும் விஷக்கிருமி - நாம் தமிழர்
அவர் செய்துள்ள போஸ்டில், ஆதவ் எனும் விஷக்கிருமி ! கரூர் உயிரிழப்புகளுக்கான முதன்மை காரணம் சொன்ன நேரத்துக்கு வராமல் பகல் 12 மணி என விளம்பரம் செய்துவிட்டு இரவு 7 மணிக்கு வந்ததுதான் என்பது ஊரறிந்த உண்மை ! மக்களை பெருந்திரளாக கூட்டி தங்களின் செல்வாக்கை காட்ட நினைத்த இந்த ஆதவ் போன்றவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள் !
ஆனால் இவரோ எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அப்பாவி ரசிகர்களை தூண்டி இன்னும் பல பேர் வாழ்க்கையை அழிக்கும் வண்ணம் பதிவிடுகிறார் ! இவர் வியூக வகுப்பாளராக இருந்தால் அந்த கட்சி எந்த லட்சணத்தில் இருக்கும் !
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி அடைந்து ஊழல் குடும்பத்தை எதிர்த்து மக்கள் தெருவுக்கு வந்தார்கள் ! நேபாளத்தில் கருத்துரிமைக்கு தடை போட்டதால் இளைஞர்கள் போராடினார்கள் ! அதையும் இந்த தற்குறி ரசிகர் கூட்டத்தையும் ஒப்பிடுவதே அயோக்கியத்தனமானது !
தன்னை காப்பாற்றிக் கொள்ள ரசிகனை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்த நினைக்கும் இவரையெல்லாம் கூட வைத்திருந்தால் விஜய் வீதிக்கு வீதி தர்ம அடி வாங்குவது உறுதி ! பதிவை ஏன்பா நீக்குன !, பயமா?
என்று கூறி உள்ளார்.
ஆதவ் எனும் விஷக்கிருமி !
— Duraimurugan (@Saattaidurai) September 30, 2025
கரூர் உயிரிழப்புகளுக்கான முதன்மை காரணம் சொன்ன நேரத்துக்கு வராமல் பகல் 12 மணி என விளம்பரம் செய்துவிட்டு இரவு 7 மணிக்கு வந்ததுதான் என்பது ஊரறிந்த உண்மை !
மக்களை பெருந்திரளாக கூட்டி தங்களின் செல்வாக்கை காட்ட நினைத்த இந்த ஆதவ் போன்றவர்கள்தான் முதன்மைக்… pic.twitter.com/MGpoEJZggl
விஜய் மீது விமர்சனம்
மேலும், விஜய் அவர்களை யாரும் தவறாக பேசாதிங்க அவர் ரொம்ப மென்மையானவர் என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் இருக்கிறார் !
அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்ன செய்வதென்றே தெரியாத ஒருவர் கையில் நாளை அதிகாரம் கிடைத்தால் என்ன ஆகும் ? சின்ன சின்ன குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான சூழலை உருவாக்கியவன் எவனாக இருந்தாலும் அவனை அந்த இயற்கை அழிக்கும் !
உங்கள் 10 லட்சம் ,20 லட்சம் நிவாரசம் எல்லாம் அந்த தாய்மார்களின் கண்ணீருக்கு முன் ஒன்றுமில்லை !, என்று கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார் நாம் தமிழர் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications