மைக்கில் தமிழரசி பேச பேச.. திகைத்த எதிர்க்கட்சி! மோடி அரசுக்கே ரூட் போட்ட ஸ்டாலின்? டெல்லி வியக்குது
சென்னை: ஒரு மாநில அரசின் திட்டத்தை இந்தியா முழுவதுமே கொண்டு வர வேண்டும் என நினைக்க வைத்தவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தான் திராவிட மாடல் அரசு. முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுகிறதோ அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்று மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன..!!
மதுரை மாவட்டத்தின் சமயநல்லூர் தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு முதன்முறையாக வெற்றி பெற்று, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் தமிழரசி.

தமிழரசி எம்எல்ஏ
இளம் வயதிலேயே அமைச்சர் பதவியை அலங்கரித்த இவரது அரசியல் பயணம், 2007-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு பெரும் சவால்களைச் சந்திக்கத் தொடங்கியது. தான் வெற்றி பெற்ற சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போன நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அவருக்கு வெற்றி கைகூடவில்லை.
அதனைத் தொடர்ந்த காலங்கள் தமிழரசிக்கு கடும் சோதனை காலமாக அமைந்தன. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 இடைத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மானாமதுரை தமிழரசி சர்ப்ரைஸ் பாராட்டு
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய புள்ளியான அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனின் ஆதரவாளர்கள் தமிழரசிக்கு சீட் கிடைக்காமல் முட்டுக்கட்டை போட்டதாக அப்போதே அரசியல் வட்டாரத்தில் பலத்த சலசலப்புகள் எழுந்தன. இருந்தாலும் தளராத உறுதியோடு காத்திருந்த தமிழரசிக்கு, கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் மானாமதுரை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
உட்கட்சி எதிர்ப்புகளையும் மீறி களமிறங்கிய அவர், அத்தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
மிஸ்ஸான அமைச்சர் பதவி
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அந்த சமயத்தில், தமிழரசிக்கு மீண்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறாதது ஏமாற்றத்தையே தந்தது.
இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பினருக்கும் தமிழரசி ஆதரவாளர்களுக்கும் இடையே இரு கோஷ்டிகளாகப் பிரிந்து மோதல் போக்கு நிலவி வருவதாக மீண்டும் செய்திகள் கசிந்தன. ஆனாலும், எதற்கும் அசராத தமிழரசி, தொகுதி முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் செய்து தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் காட்டினார்.
ஏமாற்றத்தில் ஆதரவாளர்கள்
சட்டப்பேரவை கூட்டத்தொடர் மட்டுமன்றி, அமைச்சர்கள் பங்கேற்கும் மேடைகளிலும் மானாமதுரை தொகுதிக்கான கோரிக்கைகளை தொடர்ந்து ஓங்கி ஒலித்து வந்தார்.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்ட நிலையில், அப்போதாவது தமிழரசிக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் ஆவலோடு காத்திருந்தனர். மீடியாக்களிலும் இவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மீண்டும் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் பரவின. ஆனால், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவை மாற்றங்களிலும் தமிழரசியின் பெயர் விடுபட்டது, அவரது ஆதரவாளர்களிடையே தீராத ஏமாற்றத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்..
தமிழக அரசு திட்டங்கள்
இப்போது விஷயம் என்னவென்றால், சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினை தமிழரசி அபாரமாக பாராட்டி பேசியிருக்கிறார்.. ஒரு மாநிலத்தின் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வர மத்திய அரசை நினைக்க வைத்தவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தமிழரசி புகழாரமும் சூட்டியுள்ளார்.
சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தின் போது மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பேசியபோது, "இந்தியாவிலேயே பெண்களின் வேலை வாய்ப்பு என்பது தமிழ்நாட்டில் 40 சதவீதத்தை தாண்டி உள்ளது. பெண் கல்விக்கு முக்கியத்துவத்தை தமிழகம் உணருவது போல் வேறு எந்த மாநிலம் உணரவில்லை. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 19 தோழிகள் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசும் நாடு முழுவதும் செயல்படுத்த திட்டங்களை வகுத்து வருகிறது.
டெல்லி வியக்குது
ஒரு மாநில அரசின் திட்டத்தை இந்தியா முழுவதுமே கொண்டு வர வேண்டும் என நினைக்க வைத்தவர் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தான் திராவிட மாடல் அரசு. முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுகிறதோ அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இதுமட்டுமின்றி, விடியல் பயணம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.800க்கு மேல் மிச்சப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், மகப்பேறு விடுப்பு 12 மாதங்களுக்கு ஊதியத்தோடு முதல்வர் வழங்கியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசோ வெறும் 6 மாதக்கால விடுப்பு மட்டுமே அளிக்கிறது. இதற்காக பெண்கள் நாங்கள் முதலமைச்சர்களுக்கு என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
சபாஷ் தமிழக அரசு
இதுமட்டுமின்றி, புதுமை பெண், அறிவை விரிவு செய், காலை உணவு திட்டம், தாயுமானவன் திட்டம், எண்ணும் எழுத்து, நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். எனவே, மு.க.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் தொடரும். தமிழ்நாடு வெல்லும்" என்றெல்லாம் பேசினார்.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியின் இந்த பேச்சுக்களை திமுகவினர் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்கள்..!!
குறிப்பாக, "தமிழகத்தின் திட்டங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுகிறார்" என்ற அவரது பேச்சு திமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது...!!
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications