சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழிசையை தலைவர் பதவியிலிருந்து நீக்குங்கள்.. காயத்ரி ரகுராம் கோபம்.. முற்றும் மோதல்!

தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி பெறும் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவியிலிருந்து நீக்கினால்தான் பாஜக வளர்ச்சி பெறும் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக கட்சிக்குள் தற்போது ஒரு பெரிய சிவில் வார் நடந்து கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். போரின் ஒரு பக்கத்தில் இருப்பது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

இன்னொரு பக்கத்தில் இருப்பவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் பாஜகவில் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய விவாதம் ஆகி, தற்போது பாஜகவின் தலைவர் யார் என்று வரை இந்த பிரச்சனை சென்று சேர்ந்து இருக்கிறது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

கடந்த வாரம் சென்னையில் நடந்து விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டிற்கு திரும்பிய காயத்ரி ரகுராம் மது அருந்தி வாகனம் ஒட்டியதாக போலீசாரால் குற்றஞ்சாட்டப்பட்டார். இதற்காக அவர் அபராதம் காட்டினார் என்றும் கூறப்படுகிறது. இந்த செய்தி தமிழகம் முழுக்க பெரிய வைரல் ஆனது.

மறுப்பு

மறுப்பு

இதையடுத்து, இதற்கு பதில் சொன்ன காயத்ரி ரகுராம்., நான் மது குடித்துவிட்டு எல்லாம் வாகனம் ஓட்டவில்லை. மது குடித்ததாக பொய் சொல்கிறார்கள். நான் தமிழக பாஜகவில் இருக்கிறேன். அதனால்தான் என்னை இப்படி நெருக்குகிறீர்கள். பாஜகவில் இருப்பதால் என்னை பழிவாங்குகிறார்கள், என்று கூறினார்.

தமிழிசை பதில்

தமிழிசை பதில்

இதற்கு பதில் அளித்த தமிழிசை காயத்ரி ரகுராமுக்கும் பாஜகவிற்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் தமிழக பாஜகவில் உறுப்பினாராக இல்லை. அவர் பொய் சொல்கிறார். அவரை எப்போதோ பாஜகவில் இருந்து நீக்கிவிட்டோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் செல்வதற்காக அவரே பாஜகவில் இருந்து விலகிவிட்டார் என்று கூறினார்.

பதிலடி

பதிலடி

தற்போது தமிழிசையின் பதிலுக்கு காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார். அதில், நான் இன்னும் பாஜகவில்தான் இருக்கிறேன். தமிழக பாஜக தலைவருக்கு இது கூட தெரியவில்லை. தமிழிசை சௌந்தரராஜனை தலைவர் பதவிலிருந்து நீக்கினால்தான் தமிழக பாஜக வளர்ச்சி பெறும், அப்போதுதான் தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும், என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

English summary
Tamilisai has to resign from BJP chief post says Gayathri Raguram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X