இதுதான் பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை.. பாராட்டிய தமிழிசை.. செய்தியாளர் எழுப்பிய கேள்வி
சென்னை: வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை சுமார் 1000 வரை உயர்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்திரராஜன், உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது,பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும், பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை என்றும் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், "சித்ரா பௌர்ணமி நாளில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூன்று தேவியை வணங்கிட வேண்டும் என வந்துள்ளேன். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று மாற்றம் வர வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

18 மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசு மத்திய மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது போல, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். மே 4ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் நல்லதை அருள்வார்கள் என்றார்.
சட்டசபை தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியாஆக உள்ளதா என இழுவையாக கேள்வி எழுப்பிய தமிழிசை, exit polls are not exact polls, என்று கூறினார். அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல என்றும், 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை சுமார் 1000 வரை உயர்ந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்திரராஜன், உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது,பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை என்றார். வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே என்றும் கூறினார்.
5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு , போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும்.. நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார் என்றும் தமிழிசை கூறினார். திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால் உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக தமிழிசை பதில் அளித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications