பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார்.. அவ்வளவுதான்.. படுசூடாக வைரலான தமிழிசையின் தோசை டிவீட்!
ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு குறித்து தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: சந்திரபாபு நாயுடும், ஸ்டாலினும் சேர்ந்து எந்த புது தோசையையும் சுடவில்லை என்றும், இருக்கிற தோசையைதான் பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறார்கள் என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய பாஜகவிலிருந்து பிரிந்து வந்ததிலிருந்து, பாஜகவை வீழ்த்த எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி வருகிறார். வரப்போகிற பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியே இந்த முயற்சிகளில் இறங்கி உள்ளார். இதற்காக போன வாரம்கூட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை சந்தித்து பேசினார். பிறகு, தேவகவுடாவை சந்தித்து பேசினார்.

கூட்டாக அறிவிப்பு
நேற்றுகூட சென்னை வந்த சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, பாஜகவுக்கு எதிராக எல்லா கட்சிகளும் இணைய வேண்டும் என்று இருவரும் கூட்டாக அறிவித்தனர்.
|
புது தோசை சுடவில்லை
இந்நிலையில், நேற்றைய இவர்களின் சந்திப்பு குறித்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், தமிழிசை தெரிவித்துள்ளதாவது: "சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை சந்தித்துவிட்டார், அதற்கு முன்னால் தேவகவுடாவை சந்தித்து விட்டார், ராகுலைச்சந்தித்து விட்டார்.. மிகப்பெரிய கூட்டணியை அமைத்து விட்டார் என்கின்றனர். எந்த புது தோசையையும் சுடவில்லை, ஏற்கனவே எதிரணியாக.. இருக்கும், ஒரு தோசையை.. பிய்த்து.. பிய்த்து.. சாப்பிடுகிறார், அவ்வளவுதான்.
|
இன்னெரு டீக்கடை
4 ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக கூட்டணியில் இருந்தவர் வரவு சிலவுக்காக புது கூட்டணி தேடிவருகிறார். ஏற்கனவே பழக்கப்பட்ட 4ஆண்டு சாப்பிட்டு விட்டு, பிடிக்கவில்லை என சொல்லி புது ஓட்டல் தேடுகிறார்? ஒரு டீக்கடையில் பாக்கி வைத்துவிட்டு அடுத்த டீக்கடைக்கு போவதைப்போல்!..ஸ்டாலின் மகிழ ஒன்றுமில்லை" இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.

ட்வீட்டர் கமெண்ட்கள்
மகிழ ஒன்றுமே இல்லை என்று தெரிவித்த தமிழிசை, சந்திரபாபுநாயுடு - ஸ்டாலின் சந்திப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே இந்த ட்விட்டை பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவு முழுதும் தோசை, டீ, சாப்பாடு என்றே இருக்கிறது! இதனை படித்த நெட்டிசன்கள், எப்பவும் வாயாலயே வட சுடுவீங்க இப்ப தோசை சுடுரீங்க என்றும், அக்கா தோற்றுவிடுவோம் என்று பயத்தில் தோசை இட்லி வடை என அடுக்கி கொண்டே இருக்காமல் சற்று யோசித்து எழுதுங்கள் சந்திரபாபு நாயுடு போன தேர்தலில் உங்கள் கூட்டணியில் இருந்தார் என்றும் பல்வேறு கமெண்ட்கள் வந்து விழுகின்றன.












Click it and Unblock the Notifications