சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொங்கு கிங்.. "அந்த" குரல் கேக்குதா?.. வெளிப்படையாக கமல் அனுப்பிய வார்னிங்.. அரண்டு போன திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவை மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. முக்கியமாக திமுகவிற்கு மாற்றமாக மக்கள் நீதி மய்யம் தங்களை முன்னிறுத்தி வருகிறது. அதிலும் நேற்று கமல்ஹாசன் சொன்ன சில விஷயங்கள் திமுகவிற்கு கண்டிப்பாக பெரிய நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் மூன்றாவது மிகப்பெரிய அணியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது. முதல் சட்டசபை தேர்தல் என்றாலும் மக்கள் நீதி மய்யத்திற்கு மக்கள் செல்வாக்கு களத்தில் அதிகமாகவே இருக்கிறது.

இந்த சட்டசபை தேர்தலில் 8-10% வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. மக்கள் நீதி மய்யம் தற்போது களத்தில் உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பணிகள்

பணிகள்

அதிமுக, திமுகவிற்கு நாங்கள்தான் மாற்று என்று மக்கள் நீதி மய்யம் போகிற இடங்களில் எல்லாம் சொல்லி வருகிறது. முக்கியமாக திமுக கமல்ஹாசன் இடையே மிகப்பெரிய வார்த்தை போரே நடந்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் குறித்து ஸ்டாலின் எதுவுமே பேசவில்லை என்றாலும் கூட .. கமல்ஹாசன் தொடர்ந்து ஸ்டாலினை தாக்கி வருகிறார்.

திமுக

திமுக

தமிழகத்தில் தொங்கு சட்டசபை உருவாக கூடாது என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருக்கிறார். அப்படியே தொங்கு சட்டசபை உருவானால் திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் எண்ணத்தில் கமல்ஹாசன் இல்லை. தொங்கு சட்டசபை உருவானால் யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மிரட்டல்

மிரட்டல்

தற்போது களத்தில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு போகிற இடங்களில் எல்லாம் வரவேற்பு அதிகமாக கிடைக்கிறது.அங்கு அதிமுக எதிர்ப்பு வாக்குகளை திமுகவிற்கு போகவிடாமல் கமல்ஹாசன் அதிகம் பிரிப்பார் என்கிறார்கள். அதிமுக பிடிக்காமல் வேறு வழியின்றி திமுகவிற்கு வாக்களித்தவர்கள்.. இந்த முறை கமல்ஹாசனுக்கு வாக்களிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கஷ்டம்

கஷ்டம்

தற்போது இருக்கும் நிலவரப்படி மக்கள் நீதி மய்யம் இதே வேகத்தில் சென்றால் கொங்கில் மட்டும் சுமார் 3% வாக்குகளை பெறும் என்கிறார்கள். அப்படி நடந்தால் திமுகவிற்கு அது மிகப்பெரிய அடியாக மாறும். இதனால்தான் கொங்கு மாவட்டங்களை தவிர்த்து கமல்ஹாசன் இதுவரை வேறு எங்கும் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

கொங்கு

கொங்கு

கொங்கு மாவட்டங்களில் கால் பதித்தால் மூன்றாவது பெரிய கட்சியாக மாற முடியும் என்று மக்கள் நீதி மய்யம் நம்புகிறது. இதனால்தான் கடந்த 10 நாட்களாக கமல்ஹாசன் இங்கு மட்டுமே பேசி வருகிறார். இதை நேற்று கமல்ஹாசனும் வெளிப்படையாக குறிப்பிட்டார். அதில், கொங்கு மாவட்டங்களில் எங்கு சென்றாலும் பெரிய ஆதரவு கிடைக்கிறது.

ஆதரவு

ஆதரவு


எங்களுக்கு மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது. எங்கு போனாலும் வெற்றி வெற்றி என்ற குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. மக்களிடம் எங்கள் வெற்றிக்கான அலையை பார்க்க முடிகிறது. திமுகவிற்கான கடைசி காலம் இது. திமுக தோன்றுவதற்கு ஒரு கட்டாயம் இருந்தது. தற்போது அந்த கட்டாயம் இல்லை. தற்போது திமுக தோல்வி அடைய வேண்டும் என்பதுதான் கட்டாயம்.

கட்டாயம்

கட்டாயம்

இலவசங்களை கொடுத்து இவர்கள் மக்களை ஏமாற்றி வைத்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் அதை களையும். இரண்டு கட்சிகளும் மக்கள் ஆதரவை பெற தகுதியான கட்சிகள் அல்ல. தொங்கு சட்டசபை அமைந்துவிடாமல் மக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். நேற்று கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தில் மிகவும் உற்சாகமாக பேசினார்.

உற்சாகம்

உற்சாகம்

கொங்கில் தனக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தே கமல்ஹாசன் இப்படி உற்சாகமாக இருப்பதாக கூறுகிறார்கள். இதனால்தான் திமுகவிற்கு முடிவுரை எழுதுவோம் என்று வெளிப்படையாக கமல்ஹாசன் வார்னிங் கொடுத்துள்ளார். இந்த தேர்தலில் திமுகவிற்கு எப்படியாவது ஷாக் கொடுக்க வேண்டும் என்பதில் கமல்ஹாசன் மிகவும் உறுதியாக இருக்கிறார்... கமலின் கொங்கு பாலிடிக்ஸும் இதை மையப்படுத்தியே அமைந்துள்ளது!

English summary
Tamilnadu assembly elections: MNM cheif Kamal Haasan warns DMK in Coimbatore campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X