ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்ததோ.. பேரவைக்கு அதிகாரம் இல்லையென எப்படி சொன்னார்? அப்பாவு கேள்வி

ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டத்தை படிக்க வேண்டும் என்று அப்பாவு கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற தமிழ்நாடு சட்டபேரவைக்கு அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் எந்த சட்டத்தின் அடிப்படையில் சொன்னார் என்று சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆதரவாக இருந்ததாகவும், திடீரென எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை என்றும் அப்பாவு சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். அதில் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதனை ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 அப்பாவு பேட்டி

அப்பாவு பேட்டி

இந்த நிலையில் சென்னையில் ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அப்பாவு கூறுகையில், இணையவழி சூதாட்டத்தை தடுப்பதற்கான அவசர சட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். பின்னர் அடுத்த சில வாரங்களில் பேரவையில் சட்டமுன் வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவசர சட்டத்திற்கும், சட்ட மசோதாவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

எப்படி சொல்கிறார் ஆளுநர்?

எப்படி சொல்கிறார் ஆளுநர்?

அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்து கூறியுள்ளது. மாநில அரசு மற்றும் மாநில அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எடுத்து கூறியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார் என்று தெரியவில்லை.

 ஆளுநர் சட்டத்தை படிக்க வேண்டும்

ஆளுநர் சட்டத்தை படிக்க வேண்டும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு களங்கள் ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகளை பயன்படுத்தியதை தவிர்த்திருக்கலாம். ஆன்லைன் ரம்மி பற்றி பலவிதங்மான கருத்துகள் இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசன சட்டத்தை படிக்க வேண்டும். ஆளுநர் குறிப்பிட்ட தீர்ப்பு 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி வெளியானது. அதற்கு பின் 2022ம் ஆண்டு அக்.1ல் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தந்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மாநில பட்டியலில் ஆன்லைன் சூதாட்டம்

மாநில பட்டியலில் ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் மாநில பட்டியலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் 2022ம் ஆண்டு அக்.19ல் சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்த பின்னரே, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தார்.

 எங்கிருந்து அழுத்தம் வந்தது?

எங்கிருந்து அழுத்தம் வந்தது?

தொடர்ந்து, தொடக்கத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆதரவாகத் தான் இருந்தார். ஆனால் திடீரென ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், ஆளுநரை சந்தித்த பின் மசோதா தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

இது திறமைக்கான விளையாட்டு அல்ல

இது திறமைக்கான விளையாட்டு அல்ல

பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா என்று சட்டத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஏதோவொரு ஒரு அழுத்தத்தால் தான் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார். இது திறமைக்கான விளையாட்டு அல்ல. முதலாளிகள் பொதுமக்களிடம் கொள்ளையடிக்கும் திறனுக்கான விளையாட்டு என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+