Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு! திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்! அண்ணாமலை தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சி போராட்டம் தொடர்பாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    Annamalai ஆவேசம் MK Stalin வேண்டுகோள் ! | Kallakurichi School Girl Case |Kallakurichi Protest

    கள்ளக்குறிச்சி சின்ன சேலம் பகுதியை அடுத்துள்ள கனியாமூரில் இயங்கி வரும் தனியார்ப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார்.

    இந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 13ஆம் தேதி நடந்துள்ளது.

     மாணவி தற்கொலை

    மாணவி தற்கொலை

    இருப்பினும், இது தற்கொலை இல்லை கொலை என்று மாணவியின் பெற்றோர் தரப்பில் குற்றஞ்சாட்டிப்பட்டு வருகிறது. பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு ஏற்கனவே சில மாணவிகளும் கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளதாகப் புகார் கூறுகின்றனர்.

     போராட்டம்

    போராட்டம்


    கடந்த 5 நாட்களாகவே உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலையும் வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் பள்ளி வளாகம் முன் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

     வன்முறை

    வன்முறை

    அப்போது அங்கு போதிய அளவில் போலீசார் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போதிலும் முடியவில்லை. இதனால் அங்கு இருந்த போலீசார் வாகனத்திற்கும், பள்ளி வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், பள்ளிக்கு உள்ளே புகுந்து, போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கினர்

     அண்ணாமலை

    அண்ணாமலை

    இந்தச் சம்பவத்தில் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதலாக 500 போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்துக் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் திமுக அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்,

     நம்பிக்கை இழந்துவிட்டனர்

    நம்பிக்கை இழந்துவிட்டனர்

    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "என்ன நடக்கிறது கள்ளக்குறிச்சியில்? ஆளும் திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவல்துறையினர் மீது மரியாதை இழந்து விட்டனர். கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்கிறார். உளவுத்துறை ஏடிஜிபி தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே ஆர்வமாக உள்ளார்.

     சிபிசிஐடி

    சிபிசிஐடி

    மாணவியின் தாயாரைச் சென்று சந்திக்கக் கூட நேரமில்லாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். இவை அனைத்தும் ஒரு திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் அம்மாவட்டத்தைச் சேராதவர்களாக இருக்க வேண்டும் மற்றும் பாஜக இதற்கு முன் கூறியது போல் இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்" என்று சாடியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+