சரசவரவென குறையும் தினசரி கொரோனா.. இன்று வெறும் 348 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி
சென்னை: தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் வெறும் 348 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. ஒமிக்ரான் கொரோனா காரணமா 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது கடந்த ஜன. 22இல் தினசரி கொரோனா பாதிப்பு 30,700வரை சென்றது.
அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட முற்றிலுமாக வாபஸ் பெறப்பட்டு உள்ளது..

தினசரி பாதிப்பு
இன்று மாநிலத்தில் 53 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் வங்கதேசத்தில் 3 பேரும் அசாம், பீகார் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 348 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை 34,49,721ஆக உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 5,745ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று மேலும் குறைந்து 5,066ஆக குறைந்துள்ளது. அதேபோல ஒரே நாளில் மொத்தம் 1,025 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,06,649ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. ஓமிக்ரான் அலை உச்சத்தில் இருந்த போது தினசரி கொரோனா உயிரிழப்புகள் 50 வரை சென்ற நிலையில், இன்று அது 2ஆக குறைந்துள்ளது. இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,006ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வாரியாக பார்க்கும் போது தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 92 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தினசரி பாதிப்பு 51 பேருக்கும் செங்கல்பட்டில் 39 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிர எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 50ஐ தாண்டவில்லை. ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் நேற்று 1க்கு கீழ் குறைந்தது. மாநிலத்தில் சராசரி பாசிட்டிவ் விகிதம் 0.7ஆக குறைந்துள்ளது.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications