மெரினா பீச்சுக்கு சனி, ஞாயிறு செல்ல தடை.. கோவிலில் வழிபாட்டு நேரம் அதிகரிப்பு - தமிழக அரசு உத்தரவு
சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை வீசி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டுகள்
கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கடந்த 10-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, தியேட்டர்களில் 50% இருக்கை மட்டுமே அனுமதி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மெரினா கடற்கரையில் மக்கள் கூட தடை
இந்த நிலையில் தமிழக அரசு இன்றும் புதிய கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடை செய்யப்படுகிறது.

வழிபாட்டுத்தலங்கள்
அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு தற்போது சம்பந்தப்பட்ட வழிபாட்டுதலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் அனைத்து வழிபாட்டுதலங்களிலும் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

தியேட்டர்களுக்கு புதிய தளர்வு
இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள் முதல் ஏழு நாட்களுக்கு மட்டும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிகப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications