ஹெச் ராஜா பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
சென்னை: ஹெச் ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுக்க விசிக தமிழக அரசை வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சசிகலாவால் அதிமுகவை மீட்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து அமைக்கப்மட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழுவில் தன்னை உறுப்பினராக நியமித்ததற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்நித்தார் அப்போது பேசிய திருமாவளவன் கூறும்போது, மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு நிச்சயம் சிறப்பாக செயல்படும்.

விசிகவிற்கு வெற்றி
தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த மாநில அளவில் SC/ST பிரிவினற்கு ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதை ஏற்று அரசு நடைமுறைபடுத்திருக்கிறது. தலித் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை இந்த ஆணையம் தடுக்கும் என நம்புகிறோம் இது விசிக கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.

மதுரை பல்கலைக்கழகம்
மதுரை பல்கலைகழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள் போரட்டம் நடத்திவரும் நிலையில் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்குவதோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும் என இந்த சந்திப்பின்போது முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன்.

ஜெயக்குமார்
சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றது அவரின் தனிப்பட்ட விஷயம். அதற்கான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் விமர்சனத்திற்கு அவர்தான் பதிலளிக்க வேண்டும்.

கேள்விக்குறி
அதிமுக-வை சசிகலாவால் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. பாஜகவோடு இணக்கமாக செயல்பட்டு பின்னடைவை சந்தித்துவரும் அதிமுக தலைமையை சசிகலா கைபற்றுவார என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும் ஆனாலும் இது காலம் தாழ்ந்த முடிவு .
Recommended Video

நடவடிக்கை பாயும்
ஹெச்.ராஜா-வின் பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது. பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூரா பேசிவரும் ஹெச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும் " இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications