தமிழகத்தில் 15 -18 வயது சிறாருக்கு வேக்சின் போடுவது எப்படி.. விதிமுறைகள் என்ன? அரசு முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 15-18 வயதுடையவர்களுக்கு இன்று முதல் வேக்சின் செலுத்தும் பணிகள் தொடங்கும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    15 to 18 வயதுள்ள மாணவர்களுக்கு COVID-19 Vaccine | Oneindia Tamil

    உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், அது கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு, உலக நாடுகளில் தினசரி வைரஸ் பாதிப்பை மேல்நோக்கி நகர்த்தத் தொடங்கியுள்ளது.

     பூஸ்டர் டோஸ்

    பூஸ்டர் டோஸ்

    இதன் காரணமாகப் பல நாடுகளும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல பூஸ்டர் டோஸ் பணிகளும் இந்தியாவில் வரும் ஜன. 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     சிறார்களுக்கு வேக்சின்

    சிறார்களுக்கு வேக்சின்

    அதேபோல 15 முதல் 18 வயதுடையவர்களுக்கு கொரோனா வேக்சின் செலுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 18+ வயதினருக்கே வேக்சின் போடப்பட்டு வந்த நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இன்று, ஜன. 3 முதல் சிறார்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ளது. நேற்று வரை மட்டும் இதற்காக நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

    எப்படி

    எப்படி

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 15 முதல் 18 வயதான மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வேக்சின் போடப்படும் எனச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதாவது 2007 அல்லது அதற்கு முன்பு பிறந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக இணையம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

    பெற்றோர்

    பெற்றோர்

    வேக்சின் செலுத்த வரும் மருத்துவக் குழுவுடன் ஒருங்கிணைக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை ஒருங்கிணைப்பாளராக நியமிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல வேக்சின் செலுத்தும் மையங்களில் போதிய இட வசதி ஏற்படுத்தித் தருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, 15-18 வயதானவர்களுக்கு வேக்சின் செலுத்தும் போது, இது தொடர்பாக பெற்றோர்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வேக்சின் செலுத்தும் போது பெற்றோரும் உடன் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+