தமிழகத்தில் மீண்டும் இடைத்தேர்தல்.. நாங்குநேரி தொகுதியில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார் எம்பியாகியுள்ளதால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

நாடு முழுவதும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜக கூட்டணிக்கு மக்களின் தீர்ப்பு எதிர்மறையாக உள்ளது.

பாஜக கூட்டணி தமிழகத்தில் மண்ணை கவ்வியுள்ளது. பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் அதிமுக கட்சிக்கு மட்டும் ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நான் ஜெயிச்சுட்டேன்.. எப்ப ராஜினாமா பண்ண போறீங்க சார்.. விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

வசந்தகுமார் போட்டி

வசந்தகுமார் போட்டி

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட திமுக தமிழகத்தில் 37 எம்பிக்களை பெற்றுள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ள வசந்தகுமார் போட்டியிட்டார்.

வசந்தகுமார் வெற்றி

வசந்தகுமார் வெற்றி

அவர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசகத்தில் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றியை வசமாக்கியுள்ளார். இதன் மூலம் முதல்முறையாக எம்பியாகியுள்ளார் வசந்தகுமார்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

இதன்காரணமாக அவர் ஏற்கனவே எம்எல்ஏவாக உள்ள நாங்குநேரி தொகுதியில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படியானால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

6 மாதத்துக்குள் தேர்தல்

6 மாதத்துக்குள் தேர்தல்

ஒரு தொகுதி காலியானால் அடுத்த 6 மாதத்துக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி அடுத்த 6 மாதத்துக்குள் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.

மீண்டும் தயார்

மீண்டும் தயார்

தற்போதுதான் தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு இடைத்தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+