சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கத்தரி" நாளை துவங்குகிறது.. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்.. அனலடிக்கும் தமிழகம்

நாளை துவங்குகிறது கத்தரி வெயில் என்று கூறப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: கத்தரி வெயில் நாளை துவங்கும் நிலையில், இன்று மற்றும் நாளையும் அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொளுத்தும் வெயில்... தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம்.. மக்களுக்கு அமைச்சர் மா.சு அறிவுறுத்தல்!

    இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வட மாநிலங்களில் சராசரி வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தணியும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

     சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா

     மஞ்சள் எச்சரிக்கை

    மஞ்சள் எச்சரிக்கை

    டெல்லியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் வடமேற்கு பகுதிகளுக்கு மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது... ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மே - 7ம் தேதி வரை அனல் காற்று வீச வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

     மிரட்டும் வேலூர்

    மிரட்டும் வேலூர்

    தமிழ்நாட்டை பொறுத்தவரை, கோடை வெயில் படிப்படியாக அதிகரித்து, உச்சத்தை தற்போது எட்டிவிட்டது.. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் நாளை துவங்குகிறது.. வரும், 28ம் தேதி வரை இந்த கத்திரி வெயில் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது... நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக, வேலுாரில், 42 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.. இது, 108 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.. அதேபோல, திருத்தணி 41, மதுரை விமான நிலையம், திருச்சி, தஞ்சாவூர், கரூர் பரமத்தி, 40, ஈரோடு, சென்னை மீனம்பாக்கம், 39, கடலுார், சேலம், பாளையங்கோட்டை, நாமக்கல், மதுரை நகரம், சென்னை நுங்கம்பாக்கம், 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி இருக்கிறது.

     2 நாட்களுக்கு வெப்பம்

    2 நாட்களுக்கு வெப்பம்

    அதாவது, நேற்றைய நிலவரப்படி, 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்ப நிலை பதிவாகியிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில் மேலும் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது..

    வெப்பசலனம்

    வெப்பசலனம்

    இதனிடையே, ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது... அந்தவகையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழக தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     வாழை தோப்புகள்

    வாழை தோப்புகள்

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது... அதேபோல, மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென மழை பெய்தது. சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    English summary
    tamilnadu likely to experience 3 degree celsius warmer than normal and rain the southern coastal districts today நாளை துவங்குகிறது கத்தரி வெயில் என்று கூறப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X