நேர்மையாக வாக்கு எண்ணிக்கை நடந்து இருந்தால்.. கதையே வேறு.. உதயநிதி சொல்லும் செம கணக்கு!
தமிழகத்தில் முறைகேடு இன்றி சரியாக வாக்கு எண்ணிக்கை நடந்து இருந்தால் இன்னும் அதிக இடங்களை திமுக வென்று இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் முறைகேடு இன்றி சரியாக வாக்கு எண்ணிக்கை நடந்து இருந்தால் இன்னும் அதிக இடங்களை திமுக வென்று இருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்லில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 5067 இடங்களில் திமுக கூட்டணி 2338 , அதிமுக 2185, இடங்களில் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 515 இடங்களில் திமுக 272, அதிமுக 241 இடங்களில் வெற்றி பெற்றன.
மொத்தத்தில் இரண்டிலும் திமுக கூட்டணிதான் 50%+ இடங்களை வென்றுள்ளது. இதனால் உள்ளாட்சி பகுதிகளில் திமுக தவிர்க்க முடியாத சக்தியாகி உள்ளது.

வாழ்த்து பெற்றார்
உள்ளாட்சித் தேர்தல் திமுக வெற்றியை அடுத்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து பெற்றார். அதேபோல் திமுகவின் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

உண்மை நேர்மை
உண்மையாகவும், நேர்மையாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இருந்தால் திமுக இன்னும் பெரிய வெற்றியை சந்தித்து இருக்கும். ஆளும் கட்சியின் மோசமான அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அது தடுக்கப்பட்டு உள்ளது. மக்களுக்கு திமுக மீது உள்ள ஆதரவு இதன் மூலம் புலனாகி உள்ளது.

சரியாக தேர்தல்
சரியாக தேர்தல் நடந்து இருந்தால் தமிழகத்தில் 80 முதல் 90 சதவீத வெற்றியை திமுக பெற்றிருக்கும். திமுகவிற்கு கிடைத்த வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார். அவரின் கடினமான உழைப்பிற்கு இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்கிறோம்.

திமுக கடுமை
இந்த தேர்தலில் திமுக தொண்டர்கள் கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் திமுகவிற்கு இவ்வளவு பெரிய வெற்றியை வழங்கி, ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications