சீமானுடன் கைகோர்த்த திமுக கூட்டணி கட்சிகள்.. மத்திய அரசு சட்டத்துக்கு எதிர்ப்பு! இவ்வளவு ஆபத்தா?
சென்னை: மத்திய அரசு கொண்டு வரும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
கடந்த மார்ச் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் வன வளங்களை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் இருப்பதாகவும், இந்தியில் இதற்கு பெயர் வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் குறிப்பிட்டு தமிழ்நாட்டின் 18 கட்சிகளின் பிரமுகர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி பிரமுகர்கள் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
இவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் உட்பட 18 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இயக்க தலைவர்கள் உள்ளிட்டோரும் இந்த கூட்டறிக்கையில் இடம்பெற்று உள்ளனர்.
அதில் தெரிவித்து இருப்பதாவது, "மத்திய அரசு கடந்த மார்ச் 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த வன பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில், காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, இந்த சட்டத்துக்கு இந்தியில் பெயர் வைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதற்கு இந்த சட்டம் விலக்கு அளிக்கிறது. தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துதான், மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பிறகும் கூட மத்திய அரசால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
தேச முக்கியத்துவம் என்ற பெயரில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது காடுகளை துண்டாக்கும் முயற்சி. தனியார் காடுகளுக்கு வன பாதுகாப்பு சட்டத்தில் விலக்கு அளித்தால் மரங்கள் வெட்டப்படும். இதனால் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக காப்புக் காடுகளின் சூழல் தன்மை பாதிக்கப்படும்.
காடு சார்ந்த வளங்கள், கனிமங்களை ஆய்வு செய்வதற்கு நில அதிர்வு சோதனை மேற்கொள்வதை காடுகள் பாதுகாப்பு சார்ந்த திட்டமாக அரசால் அறிவிக்க முடியும் என கூறியிருப்பது தேசிய காடுகள் கொள்கைக்கு எதிரானது. இந்த சட்டம் மூலம் கிராமசபை ஒப்புதல் இல்லாமலேயே திட்டங்களுக்கு மத்திய அரசால் அனுமதி வழங்க முடியும். மேலும் வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றை தனியாருக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு காடழிப்புக்கு வித்திடும் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த சட்டத்துக்கு எதிராக மாநில அரசும் தனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications