மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை தமிழக காவல் துறை முடக்கியுள்ளது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடிக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதும் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 3 உதவியாளர்கள் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாவதிலிருந்து தப்ப ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

17ஆம் தேதி
இதையடுத்து அவர் 17ஆம் தேதி முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. எனினும் அவர் பிடிபடவில்லை. அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெளிநாடு
ராஜேந்திர பாலாஜியை தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வருகிறது. அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதமாக அவருக்கு எதிராக லுக் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் அவரது நகர்வுகளை முடக்க ராஜேந்திர பாலாஜியின் பெயரில் உள்ள 6 வங்கிக் கணக்குகளை தமிழக காவல் துறை முடக்கியுள்ளது. பொதுவாக ஒருவர் தலைமறைவு என அறிவித்துவிட்டால் அவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது வழக்கமான செயலாகும். இதன் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ராஜேந்திர பாலாஜி செல்வதை தடுக்கலாம்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு
இதனிடையே முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஒரு வேளை உச்சநீதிமன்றத்திலும் இவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டால் இவரது பிடி மேலும் இறுகும் என தெரிகிறது.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications