வங்கக்கடலில் பலம்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கே மழை பெய்யும்? வெதர்மேன் தந்த முக்கிய அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுத்த பின் வடக்கு கடலோர மாவட்டங்களை நெருங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்
சென்னையில் இதனால் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் வடதமிழ்நாட்டிலும், கடலூரில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகி உள்ள தாழ்வு நிலை எப்போது தமிழ்நாடு கடல் பகுதிகளுக்கு அருகே வரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தாழ்வு பகுதி
வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள ட்வீட்டில், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் அதிக அளவில் மேக கூட்டங்கள் சேர்ந்து வருகிறது. இங்கு கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது. காற்றின் குறுக்கு வெட்டு வேகம் குறைவாக உள்ளது. இதனால் தற்போது இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். அதன்பின் இது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

கடலோர மாவட்டம்
அதை தொடர்ந்து வடக்கு கடலோர மாவட்டங்களை 11ம் தேதி இந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் அடையும். இந்த தாழ்வு மண்டலத்தின் மேற்கு பகுதியில் மேக கூட்டம் அதிகம் உள்ளது. இதனால் தாழ்வு மண்டலம் கடலோர பகுதிகளை நெருங்க நெருங்க டெல்டாவில் இன்று காலை / மதியத்தில் இருந்து மழை குறையும். இன்னொரு பக்கம் கடலூர் முதல் சென்னை வரை 11ம் தேதி பிற்பகல் வரை பெய்யும்.

வட உள்மாவட்டம்
வட உள் மாவட்டங்களில் இதனால் நாளை மழை பெய்யும். அதன்படி ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் 11ம் தேதி மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications