சென்னையில் திடீர் கனமழை ஏன்.. மதியம் 1 முதல் 2 மணி வரை நடந்த மாற்றம் என்ன? வெதர்மேன் ட்வீட்
சென்னை: சென்னையில் காலையில் வெப்பம் தகித்து வந்த நிலையில் திடீரென மழை பெய்தது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை காலம் கடந்த மார்ச் மாதம் முதலே தொடங்கி அன்றாடம் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் மலைபிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நிலையில் அவ்வப்போது பெய்யும் கோடை மழை மக்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது.
கடந்த சில தினங்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது. இதனால் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 7-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
எனினும் வெப்பம் இன்னும் குறையாத நிலையில் பள்ளிகள் திறப்பும் மீண்டும் ஒரு முறை தள்ளி போயுள்ளது. அதன்படி ஜூன் 12 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜன் 14 ஆம் தேதி 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் காலை முதல் சென்னையில் வெயில் கொளுத்தி வந்தது. மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம், முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, அண்ணாசாலை அரும்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
அது போல் சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, சிங்கப்பெருமாள்கோயில், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். கோடை விடுமுறை முடிந்து இன்று சென்னை திரும்பியவர்கள் இந்த மழையால் மகிழ்ந்தனர்.
இந்த திடீர் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் கடல் காற்று மதியம் 1 முதல் 2 மணி வரை வரும். இது சென்னை புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications