"ஷார்ப்பாக" வரப்போகும் மழை.. நியூ இயர் பிளான் போட்டு இருக்கீங்களா? வெதர்மேன் மிக முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டு தினத்தன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் தற்போது மிகவும் குளிரான வானிலை காணப்பட்டு வருகிறது. குளிர்காலம் என்பதால் பல மாவட்டங்களில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ளது.
கடந்த நவம்பர் இறுதியில் தமிழ்நாடு முழுக்க கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின் மழை குறைந்து குளிர் அதிகரித்துள்ளது.

வெதர்மேன் பிரதீப் ஜான்
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கடலோர தமிழ்நாட்டில் ஜனவரி 2ம் தேதி வரை மழை பெய்யும். கிழக்கு காற்று காரணமாக இன்றில் இருந்து ஜனவரி 2 வரை கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இப்போது வெயில்தான் அடிக்கும். ஆனால் திடீரென மழை பெய்யும்.

தீவிர மழை
திடீரென ஷார்ப்பாக தீவிரமாக மழை பெய்ய போகிறது. முக்கியமாக 31ம் தேதி மற்றும் புத்தாண்டு தினத்தன்று திடீரென மழை பெய்யும். சென்னை முதல் டெல்டா வரை மொத்தமாக மழை பெய்யும்.

மழை தமிழ்நாடு
தென் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்யும். ஆனால் கவலை படும் அளவிற்கு மழை இருக்காது. விவசாயிகளுக்கு இது அறுவடை செய்யும் நேரம். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் 2021ல் பெய்த வரலாறு காணாத ஜனவரி மழையை போல இந்த மழை இருக்காது.

வெப்பநிலை நிலவரம்
இன்று மலைவாசஸ்தலங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரம். ஊட்டியில் கடும் குளிர் ஏற்பட்டது. தீபகர இந்தியாவின் பகுதியில் கடும் குளிர் ஏற்பட்டது.
ஊட்டி- 3.0
மூணார்- 6.0
கொடைக்கானல்- 7.1
ஏற்காடு- 10
வால்பாறை- 10
குன்னூர்- 10.2
அரக்கு - 10.9
மகாபலேஷ்வர் - 12.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications