இனி ஜாலியா விளையாடுவேன்..புன்னகை முகத்துடன் ‘டான்யா’! உருகிய பெற்றோர்! நலமாக இருப்பதாக அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அரிய வகை முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி டான்யாவுக்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டடுள்ள நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும், இந்த வயதுள்ள சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை என தண்டலம் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினரின் மூத்த மகளான ஒன்பது வயதான சிறுமி டான்யா அரியவகை முகச் சிதைவு நோயால் பாதிக்கபட்டிருந்தார்.

முக அறுவை சிகிச்சை செய்ய முதல்­வர் உதவி செய்யவேண்­டும் என்று சிறுமி யின் பெற்­றோர் கண்­ணீர் மல்க கோரிக்கை விடுத்­தனர். இதுதொடர்பாக பல்வேறு ஊடகங்களில், சமூக வலைதளங்களில் டான்யாவுக்கு உதவ வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முதல்வர் உத்தரவு

முதல்வர் உத்தரவு

எனக்கு விளை­யாட ஆசை­யாக உள்­ளது. ஆனால், என் கன்­னம் இப்­படி இருப்­ப­தால், மற்ற நண்­பர்­கள் என்­னு­டன் சேர்ந்து விளை­யாட மறுக்­கி­றார்­கள். எனக்கு முதல்­வர் ஐயா உதவவேண்­டும் என்று கோரி­யிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க முதல்­வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் 10பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அவசர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சை வெற்றி

அறுவைச் சிகிச்சை வெற்றி

கடந்த 23ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் சுமார் 10 மணிநேரமாக நடைபெற்று வந்த இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து அறுவை சிகிச்சை முடிந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வெளியே வந்த சிறுமி டான்யாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் நேரில் சந்தித்தார். தொடர்ந்து உடல் நலம் தேதி வரும் சிறுமி டான்யாவை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

 மாணவி உடல்நலம்

மாணவி உடல்நலம்

இந்நிலையில் மாணவி உடல்நலம் தொடர்பாக சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்," அட்வான்ஸ்டு ஹெமிஃபேஷியல் அட்ராபி என்ற நிலையில் உள்ள 9 வயது டானியா, பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில், துறைத் தலைவர் டாக்டர் சூர்யா ராவ் ஆர்.வி.எம்., 2022 ஆகஸ்ட் 17 அன்று அனுமதிக்கப்பட்டார். இரத்த பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் , எக்கோ, சிடி, மற்றும் மூளையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

மயக்க மருந்துக்கான அனுமதியைப் பெற்ற பிறகு, தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், டான்யாவுக்கு முக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினோம். 23 ஆகஸ்ட் 2022 அன்று, அறுவை சிகிச்சை செய்தோம். இது சுமார் 9 மணி நேரம் நீடித்தது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை உடல்நிலை நிலையாக இருந்த நிலையில், சிறுமி PIC வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய 5 வது நாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று, குழந்தையுடன் உரையாடி அவரது கவனிப்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினார். தற்போது சிறுமி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைக்கு பாரி ரோம்பெர்க் நோய்க்குறியின் காரணமாக பாதிப்பட்ட சிறுமிக்கு, முக மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+