பாஜகவின் டெல்லி பாணி தமிழகத்தில் எடுபடாது.. ஏ1 குற்றவாளி மோடியா, முதல்வரா - அமைச்சர் ரகுபதி ஆவேசம்
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி ஊழல் என்பதற்கான ஆதாரம் உள்ளதா, இதில் முதலமைச்சரை ஊழல் குற்றவாளி என்று கூறுவதா?. அப்படி என்றால் அதானி விவகாரம் மற்றும் கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் அரசு என்ற குற்றச்சாட்டு விவகாரத்தில் மோடியை ஏ1 குற்றவாளி என்று கூற முடியுமா. பாஜகவின் டெல்லி பாணி தமிழகத்தில் எடுபடாது என்றும் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் சேர்ந்துவிட்டால் யாராக இருந்தாலும் புனிதர்களாகி விடுகிறார்கள். ஆனால், கட்சியில் சேராதவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரி, அசாம் காங்கிரஸைச் சேர்ந்த ஹிமன் பிஸ்வாஸ் சர்மா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, சிவசேனாவை பாவணா கவாலி உள்ளிட்டோர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகள் போடப்பட்டன. ஆனால், அவர்கள் எல்லாம் பாஜகவில் ஐக்கியமான பின்னர் அந்த வழக்குகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. எங்கேயாவது அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று சொல்ல முடியுமா.
அமலாக்கத் துறையை இன்று ஒரு கேடயமாகத்தான் பாஜக பயன்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சென்னையில் இன்று ஊர்வலம் நடத்த பாஜக சார்பில் அனுமதி கேட்டிருந்தது. அனுமதி கிடைக்காத சூழ்நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வரை பற்றி தவறான செய்தியை சொல்லியுள்ளார். அதாவது டாஸ்மாக் ஊழலில் ஏ1 குற்றவாளி என்று முதல்வரை கூறியுள்ளார். முழுக்க முழுக்க இது ஒரு சட்ட விரோதமான செயல்.
பாஜகவில் இணைந்தால் சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளை முடித்து வைக்கிறோம் என்று டெல்லி முதல்வர் மணீஸ் சிசோடியாவிடம் பாஜக பேரம் பேசியது. ஆனால், அவர் அக்கட்சியில் சேர மறுத்துவிட்டார். நீங்கள் ஏன் பாஜகவில் சேரக் கூடாது என்று அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியிடம் கேட்டது என்று நீதிமன்றத்திலேயே அவருடைய வழக்கறிஞர் அதிர்ச்சி தகவலை சொன்னார்.
சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குகளில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது பாஜகவில் சேர்ந்ததால் புனிதர்களாகி விட்டார்களா. அல்லது அவர்களை காப்பாற்றியவர் முதல் குற்றவாளியாக கருதப்படுவாரா என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோல, அதானியின் செல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதில் 20 ஆயிரம் கோடி யாருக்குச் சொந்தமானது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கூறி ஏன் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி அதானியின் செல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரா. அல்லது ஒன்றிய அரசின் ஆஸ்தானா அடியாள் அமலாக்கத் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுமா. கர்நாடகவின் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆட்சியிலே 40 சதவீத கமிஷன் அரசு என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது சட்டவிரோத பணப் பரிமாற்றம் என்று சொல்லி அமலாக்கத் துறை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் அடிப்படையில் மோடியை ஏ1 என்று சொன்னால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா. அமலாக்கத் துறையை ஒரு கருவியாக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர்.
1000 கோடி ஊழல் என்று சொல்கின்றனர். ரைடு நடத்தி எத்தனை நாளாகிவிட்டது. இதுவரை ஏதாவது ஆதாரம் காண்பிக்கப்பட்டுள்ளதா, ஆதாரம் இருக்கிறதா. அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த குற்றச்சாட்டை தெளிவாக மறுத்திருக்கிறார். எதை வேண்டுமானாலும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார். டெல்லி பாணியில் தமிழ்நாட்டில் அரசியல் செய்துவிடலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.
தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். அதனால், தமிழகத்தில் பாஜகவின் பாய்ச்சலும் இங்கு செல்லுபடியாகாது. நம் பிள்ளைகளுக்கு கல்விக்காக ஒதுக்கப்பட்ட 2192 கோடி ரூபாயை பாஜக அரசு, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகவும், இந்தி திணிப்பை வலியுறுத்தி தர மறுக்கின்றது. அதேபோல, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஏறக்குறைய 3 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு மறுக்கிறது. ஆனால் இவற்றை எல்லாம் கண்டித்து இன்றைக்கு மாநிலத்தில் இருக்கக்கூடிய பாஜக, தமிழ்நாட்டில் மக்களுடைய நலனுக்காக போராட தயாரா.
அவ்வாறு போராடினால் ஒற்றை இலக்கத்தில் இருந்து இரட்டை இலக்கத்திற்கு வர முடியும். ஆனால், அவர்கள் அதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால் தமிழ்நாடு மக்கள் நலனிலே அவர்களுக்கு எந்தவித அக்கறையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அமலாக்கத் துறை நடத்தும் ரெய்டு என்பது தொடர்ந்து இதுபோல பழிவாங்கும் செயல்களுக்காக பயன்படுத்தப்படுகிறதே தவிர அவர்களால் எந்தவித குற்றச்சாட்டுகளையும் கூற முடியாது.
கூறினால் அதனை சந்திக்கத் தயாராக உள்ளோம். எங்கள் மடியில் கனமில்லை. வழியிலே பயமில்லை. துணிச்சலோடு எதையும் சந்திக்க கூடியவர் தான் தமிழக முதல்வர். எந்த தவறுக்கும் அவர் இடம் கொடுக்கவோ, துணை போகவோ மாட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாகவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் எந்த தவறும் இல்லை. இதுபோன்ற முன் உதாரணங்கள் நிறைய உள்ளன.
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால், அவர்களை உத்தமர்கள் என்று கூறிவிட முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுற்றிலும் உள்ள எல்லா மாநிலங்களிலும் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது விலக்கை கொண்டு வந்தால் இங்குள்ள மக்கள் புதுச்சேரிக்கு சென்று குடிக்க கூடிய சூழல் உருவாகும். இதனால்தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
இளம் விதவைகள் அதிகரிப்பதற்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும். டாஸ்மாக்கால் செத்துப் போனார்கள் என்று எந்த கிராமத்தில் இருந்து புகார் வந்தது. 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சூழ்நிலையைப் பொறுத்து கடைகளை மூட வரும் காலங்களில் முதல்வர் முடிவு செய்வார். தொகுதி மறுவரை, மும்மொழித் திட்டம் இவற்றை எல்லாம் முன்னெடுத்து நம்முடைய தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடுகிறார்கள்.
தமிழக எம்பிக்கள் எண்ணிக்கையை குறைப்பதற்காக தொகுதி மறுவரையரை என்ற பெயரில் தொகுதிகளுடைய எண்ணிக்கையை குறைத்துவிட்டால் இவர்களின் குரல் அமுங்கும் என்று பாஜகவினர் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்களோ அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் சக்தியாக தமிழக முதல்வர் இருக்கிறார். இதனால், முதல்வர் மேல் பாஜகவினருக்கு தனி கோபம் என்றார்.
தேதி அறிவிக்காமல் முதல்வர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் வீட்டுக்கு அண்ணாமலை வந்து பார்க்கட்டும் என்று கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
"மிஷன் கேரளா.." சத்தமே இல்லாமல் இறங்கிய ஆர்எஸ்எஸ்.. தேர்தலில் காத்திருக்கும் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications