Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு டாஸ்மாக் கடைகளுக்கு லீவு? 2 நாளில் ரூ.600 கோடி இலக்கு.. ராஜேஸ்வரி பிரியா நறுக்.. கவனித்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் புதுப்புது ரகங்களில் மதுபாட்டில்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டு வரும்நிலையில், ராஜேஸ்வரி பிரியா காட்டமான கேள்வியை எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், திமுக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை தினங்களில் அதிகமாகவும் மதுபானங்கள் விற்பனையாகின்றன. அதேபோல, பண்டிகைகள், சிறப்பு நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாகிறது.

tasmac shops rajeswari priya tamil nadu government

பொங்கல், தீபாவளி நேரங்களில் டாஸ்மாக் வருமானம் பன்மடங்கு உயர்ந்து விடுவது வாடிக்கையாகும்.. எனவேதான், மதுப்பிரியர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சரக்கு விற்பனை: தீபாவளியின்போது, டாஸ்மாக் வருமானம் 3 மடங்காக பெருகிவிடும்.. கடந்த வருட தீபாவளிக்கு வெறும் 2 நாளில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை நடந்த நிலையில், இந்த தீபாவளிக்கு ரூ.600 கோடி அளவுக்கு அதிகபட்ச சரக்கு விற்பனை நடைபெறலாம் என்று கணக்கு போடப்பட்டு வருகிறது.

அதனால்தான், பஸ் நிலையம், ரெயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் நெருக்கம் அதிகம் கூடும் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் எப்போதுமே நெரிசலில் உள்ளதால், கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க முடிவாகி உள்ளது.. தினமும் ரூ.2 லட்சத்துக்கு மேல் விற்பனையாகும் 3,500 மதுக்கடைகளிலும் கூடுதல் விற்பனை கவுண்ட்டர்களை அமைக்க அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டாஸ்மாக்: எனவே, வருகிற 30, 31-ந்தேதி, நவம்பர் 1, 2, 3 ஆகிய 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் களை கட்டும் என்பதால் கூடுதல் சரக்குகளை இருப்பு வைப்பதற்காக, இப்போதே முன்னேற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது.. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் க்யூஆர் கோடு ஸ்கேனர் மூலம் பணம் செலுத்தும் திட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் விரைவாக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒட்டுமொத்தமாக பில்லிங் முறையே மாற இருப்பதாகவும் மற்றொரு தகவல் பரபரத்து வருகிறது.. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் கடைக்கு வரும் பாட்டில்கள் எண்ணிக்கை, இருப்பு, விற்பனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தினசரி அடிப்படையில் டாஸ்மாக் ஊழியர்கள் இனி அப்டேட் செய்ய வேண்டிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இலக்கை நிர்ணயித்துள்ளதற்கு ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா, விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதிய ரக சரக்குகள்: "சென்ற தீபாவளிக்கு புதிய ரக பீர்களை அறிமுகம் செய்து வெற்றியடைந்த சாராய மாடல் அரசு இந்த தீபாவளிக்கு மேலும் புதிய ரக சரக்குகளை அறிமுகம் செய்து 600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இலக்கை நிர்ணயித்துள்ளது, மேலும் கூட்டத்தை சமாளிக்க 3500 கடைகளில் கூடுதல் கவுன்டர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது இந்த சாராய மாடல் அரசு.

இப்படி சாராய விற்பனையை அதிகப்படுத்தி வருமானத்தை ஈட்டும் அளவுக்கு மிகவும் மலிவான நிலைக்கு சென்றுள்ள முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான இந்த அரசு எதை நோக்கி பயணிக்கின்றது? ஏற்கனவே தமிழ்நாட்டில் மது அருந்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழ்நிலையில், இதுதான் படிப்படியாக மதுக்கடைகளை மூடும் லட்சணமா?

சாராயம்: சாராயத்தை விற்று ஆட்சி நடத்த விரும்பவில்லை என்றால் ஏன் இந்த அரசு தீபாவளிக்கு இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடக்கூடாது? அப்படி அரசு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விட்டால் மட்டுமே குடி நோயாளிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு நிம்மதியான தீபாவளியாக அமையும்" என்று காட்டமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+