காலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்
Recommended Video
சென்னை: தேர்தல் நாளான இன்று காலையில், தலைவன் இருக்கிறான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆன நிலையில், மாலையில், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் அவரது ரசிகர் டிரெண்டாக்கி உள்ளனர்.
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. காலையில் இருந்து மோதல் இன்றி சென்ற வாக்குபதிவு, மதியத்திற்கு பிறகு புயல் காற்று போல் களேபரமானது.
அரக்கோணம் அருகே உள்ள கீழ்விஷாரம் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம், குமரியில் கத்திக்குத்து சம்பவமும் அரங்கேறியது. மற்றப்படி அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

தலைவன் இருக்கிறான்
மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. இதனையொட்டி, அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் டிவிட்டரில் தலைவன் இருக்கிறான் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கினர்.

வேண்டுகோள்
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது

தர்பாரில் பிசி
சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர். போருக்கு தயாராக இருக்குமாறு கூறியுள்ள ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications