அவுங்க மேகதாதுன்னா.. நாம ஒகேனக்கல் குடிநீர் திட்டம்.. தங்கம் தென்னரசு சொன்ன இதை நோட் பண்ணீங்களா
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில், இதில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
கடந்த பிப்.1இல் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த வாரம் அம்மாநில அரசின் பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்தார். அப்போது மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார். இதற்கு அப்போதே தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. இதற்கிடையே இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக பட்ஜெட்: அப்போது மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார். அதாவது காவிரியின் குறுக்கே மத்திய அரசின் உரிய அனுமதி பெற்று மேகதாது அணையைக் கட்டுவோம் என அவர் கூறியிருந்தார். இதற்கு அப்போதே தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. கர்நாடக அரசின் இந்த அறிவிப்பிற்குத் தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மேகதாதுவில் அணைக் கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி ஆற்றுத் தண்ணீரின் வரத்துக் குறையும்.. இதனால் டெல்டா பகுதியில் இருக்கும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதே எதிர்ப்பிற்குக் காரணமாகும். இதற்கிடையே இன்று தாக்கல் செய்த தமிழக பட்ஜெட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைச் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ரவி தனது உரையைப் படிக்க மறுத்தது தனிக் கதை. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்த சூழலில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப். 15ஆம் தேதி பதிலளித்தார்.
இதற்கிடையே இன்று சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர், "1517 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயன்பெறும் வகையில் 150 மில்லி லிட்டர் கொள் திறன் கொண்ட இந்நிலையம் நிறைவடையும் தருவாயில் உள்ளது விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்: 2007ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் 7890 கோடி செலவில் செயல்படுத்தப்படும். தருமபுரி, கிஷண்கிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 40 லட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள். மேலும், அப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் இது உதவும்
கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 66 ஆயிரம் மக்களுக்குக் குடிநீர் வழங்கவும். அங்குள்ள சிப்காட் வளாகத்திற்கு நீர் வழங்கவும் 366 கோடி மதிப்பில் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டுள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இரு ஊராட்சிகளில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படும்" என்றார். v












Click it and Unblock the Notifications